அம்மா
அம்மா
அம்மா எனும் அறிமுகத்தில்;
என்தனக்கு உறவானாள்
ஆருயிராய் என்னை
அன்போடு அரவணைத்தாள்
இன்னல் முடிக்க இரவு பகல்
ஊனுறக்கம் விட்டிருந்தாள்
ஈரேள் உலகு முதல்
போற்றிடவே பெயரும் பெற்றாள்
உன்னதமாய் உடனிருந்து
ஊட்டி வளர்த்தெடுத்தாள்
ஊரார் பேச்சை விட்டு
என்பிள்ளை என்பிள்ளை என்றுரைத்தாள்
எப்பொழுதும் எந்தன் முகவதனம்
மகிழ்ந்துவர மலர்வு கண்டாள்
ஏசிவிட்டாளென்றால் எனைநினைத்து
புலம்பி அழுதிடுவாள்
ஐம்புலமும் சீராய் விளங்கிவர
சிற்றின்பப் பாட்டிசைப்பாள்
ஒரு நாள் முடிவதில்லை
தினம் தினம் தொடர்ந்திடுவாள்
ஓசியிலே முத்தம் கேட்டு
என்னை எப்போதும் அணைத்திடுவாள்
ஒளடதம் தந்தே எனை
அபிஷேகம் செய்து வைப்பாள்
இஃது இப்பாரினிலே இணையுண்டோ
என் அன்னைத்தமிழ் பெண்மணிக்கு
வாழ்க! வாழ்க! அன்னையவள்
வழிவழியாய் வரவேண்டும்
வசந்தமது அன்னையவள் வாழ்வினிலே
ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்)
பிள்ளையார் கோயில் வீதி
கிரான்குளம் - 07, மட்டக்களப்பு
இலங்கை
Comments
Post a Comment