பாடு மீன்
சிறுவர் பாடல்
பாடுமீன்
பாடுமீன்
பாடுமீனே பாடுமீனே
எங்கே இருக்கிறாய்
நீயும் எங்கே இருக்கிறாய்
நீயும் பாடவழி
கிடைத்த கதையை
எனக்குச் செல்லித்தா
நீயும்
எனக்குச் செல்லித்தா
பாடிப் பாடி பாடிப் பாடி
பெயரெடுத்தாயோ – அதுவும்
தேனிசையாய் வருவதற்கு
வழியெடுத்தாயோ
மீன்பாடும் தேன்நாடாய்
மலரச் செய்தாயோ
வையகமே போற்ற – நீயும்
வழிசமைத்தாயோ
நீயும்
வழிசமைத்தாயோ
ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்)
பிள்ளையார் கோயில் வீதி
கிரான்குளம் - 07, மட்டக்களப்பு
Comments
Post a Comment