பாடசாலைக் கலாசாரம்
பாடசாலைக் கலாசாரம்
1. பாடசாலைக் கலாசாரம் என்றால் என்ன?
• பாடசாலை என்பது அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரை இணை;துச் செயற்படும் ஒரு நிறுவனமாகும். இன்நிலையில் அப்பாடசாலையில் பணியாற்றவோர் பயன்பெறுவோர் யாவரும் 'நாங்கள் இங்கே எவ்வாறு செயற்படுகின்றோம்', 'எங்களது செயற்பாடுகளை நாங்கள் எவ்வாறு வெற்றி கொள்கின்றோம்' என்பதை வெளிப்படுத்துவதாக அமைவதே பாடசாலைக் கலாசாரமாகும்.
• Tel Ford (1996) என்பார் பாடசாலைக் கலாசாரத்தை பின்வருமாறு வரையறுக்கின்றார்.பாடசாலைக் கலாசாரம் என்பது 'நிலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பிணைப்புக்களைக் கொண்ட நீரோட்டம் போன்றதாகும்.' இங்கே சிறு சிறு பிணைப்புக்கள் எனப்படுவது பாடசாலை ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் காணப்படும் சமவலுவுள்ள பரஸ்பர உணர்வுகளும் மாறுதல்களும் ஆகும். இவ்வரைவிலக்கணம் பாடசாலையின் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பற்றுதலை அடிப்படையாகக்கொண்ட பிணைப்புக்களே பாடசாலைக் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
• பாடசாலைக் கலாசாரம் என்பது மாணவர் உறவுகள், ஆசிரியர்களின் ஒத்தாசை, பௌதீகவள கவின்நிலை, முரண்பாட்டு; தீர்வுகள், தீர்மானமெடுத்தலில் பங்களிப்பு, செழுமையான கலைத்திட்ட அமுலாக்கம், ஆலோசனைச் சேவை,மாற்று ஏற்பாடுகள், தனிப்பட்ட அழுத்தங்களைக் குறைத்தல் போன்றவற்றின் நேர்நிலை மாற்றங்களில் தங்கியுள்ளது. எனினும் அசிரியர்களின் பங்களிப்பு அ;தியாவசியமானதாகும்.
2. கலாசாரத்தை வெளிக்காட்டும் காட்டிகள்
• ஒரு பாடசாலைக்குப் புதிதாக நியமனம் பெற்றவரும் ஆசிரியர்கள் அப்பாடசாலையில் ஏற்கனவே கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து அப்பாடசாலையின் கலாசாரத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்கின்றார்கள். இதற்கு ஏற்கனவே உள்ள ஆசிரியர்களின் பிரதிபலிப்புக்கள், வெளிப்படுத்தும் கண்ணோட்டங்கள், முன்வைக்கும் விமர்சனங்கள் என்பனவும் ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் நடத்தைக் கோலங்கள், அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்கள் துணையாகின்றன
• ஒரு பாடசாலைக்குப் புதிதாக வந்து சேரும் மாணவர்கள் அப்பாடசாலையில் ஏற்கனவே கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் நடத்தைக் கோலங்களிலிருந்து அப்பாடசாலையின் கலாசாரத்தைக் கற்றுக் கொள்கின்றார்கள்.
• பாடசாலைக் கலாசாரமென்பதை வெளிக்காட்டும் பிரதான விடயமாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என்போரது நடத்தைக் கோலங்கள் அமைகின்றன.
3. பாடசாலைக் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தோற்றப்பாடுகளாக Beare என்பார் குறிப்பிடுபவை
• பாடசாலை தொடர்பான தெளிவான இலட்சியத்தை ஆசிரியர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதை பாடசாலை முகாமைத்துவம் தெளிவாகப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
• பாடசாலையின் இலட்சியத்துடன் பிணைக்கப்பட்டாக ஆசிரியர்களின் தொலை நோக்கும் பணி இலக்கும் அமைக்கப்படல் வேண்டும்.
• ஆசிரியர்களின ஒவ்வொரு செயற்பாட்டிலும் செயற்பாட்டுக் கூறுகளிலும் பாடசாலை இலட்சியம் பின்னணியாக அமையும் நிலையினை தொடர்ச்சியாக ஊக்குவித்தல் வேண்டும்.
• பாடசாலையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயற்படுவதற்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
• ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஏற்படும் இடைத்தாக்கங்கள் தரமும் விருத்திசார் நோக்கம் கொண்டதாகவும் நேர்த்தியாகக் கட்டியெழுப்பப்பட்ட விழுமியத் தொகுதி ஒன்றினை சார்ந்திருப்பதனையும் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு ஊக்குவிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும்.
• அறிவுபூர்வமான நம்பிக்கைகள், வரலாற்று நோக்குகள், கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை ஆற்றுவதற்கான சுதந்திரமும் சந்தர்ப்பமும், ஊக்குவிப்புக்களும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும்.
4. செழுமையான பாடசாலைக் கலாசாரத்தினைக் கட்டியெழுப்புவதற்காக பாடசாலை ஆசிரியர்கள் நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டிய விடயங்கள்
• பாடசாலை ஒரு கூட்டுச் சமூகம்
• பொது இலக்கின் மீது நம்பிக்கை கொள்ளல்
• பாடசாலைமட்டத்தில் பிரச்சினைகளைத் தீர்த்தல்
• உயர்வான எதிர் பார்ப்புக்களுடன் இயங்குதல்
• குழுக்களிடையே நம்பிக்கைத் தன்மை
• பாடசாலைக் கலாசாரம் என்பது வாழ்நாள் கற்றலைத் தருவது
• வளப் பகிர்வில் உண்மைத் தன்மையுடன் நடத்தல்
• பெற்றோரின் ஈடுபாடு நன்மையானதே என்ற நம்பிக்கை
5. பாடசாலைக் கலாசாரம் தளர்வான தொகுதியாக ஏன் விபரிக்கப்படுகின்றது?
• பாடசாலைக் கலாசாரத்தில் தொடர்பு கொள்வோரின் உளப்பாங்கு, நடத்தை என்பன நியமங்களை, விழுமியங்களைப் பேணாமை.
• காலத்துக்குக் காலம் மாற்றமுறும் கல்விசார் மற்றும் அறிவு சார் செயற்பாடுகளை உள்வாங்கிக் கொள்வதில் உண்டாகும் தாமதம்.
• சமூகமயமாக்கல் செயன்முறையில் இடம்பெறும் தடைகள்.
6. முகாமைத்துவக் கலாசாரம் என்றால் என்ன?
பாடசாலைக் கலாசார விருத்திக்கு அனை நிர்வகிக்கின்ற முகாமைத்துவம் முக்கியம் பெறுகின்றது. இம்முகமைத்துவ முறையே முகாமைத்துவக் கலாசாரமாகும்.
7. முகாமைத்துவக் கலாசாரம் உயர்வாகப் பேணப்படுவதற்கு அத்தியாவசியமான கலாசார அம்சங்கள் எவை?
• நிறுவனம் உரியவாறு ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்.
• பொரு;தமான வகையில் அதிகாரப் பரவல் செய்யப்பட்டிருத்தல்.
• கருத்துக்களும் அனுபவங்களும் உரியவாறு பரிமாறக் கூடியதாக இருத்தல்.
• நிறுவனத்தின் பணியாளர்கள் முலிருந்து கீழ் நோக்கி சமாந்தரமாக அனைவரும் தமது கடமைகளைச் சிறப்பாக ஆற்றும் வகையில் தம்மை அர்ப்பணிக்கும் நிலையில் காணப்படல்.
• நிறுவனத்தின் பணியார்கள் த்தமக்குரிய துறையிலே தொழில் விருத்தி பெறக்கூடியவாறு வழிவகை செய்யப்பட்டிருத்தல்
முகாமைத்துவக் கலாசாரம் விருத்தியுறும் போது நிறுவனம் தனக்கே உரித்தான விழுமியங்களையும் நியமங்களையும் பெற்றுக் கொள்ளும். இதன்மூலம் நிறுவனத்தின் பொதுவான எதிர்பார்ப்புக்களும் பணியாளரது பொதுவான எதிர்பார்ப்புக்களும் பணியார் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றிணையவும் முடியும்.
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு
Comments
Post a Comment