கலைஞர் ஒன்று கூடல்
கலைஞர் ஒன்று கூடல்
***************************கலைஞர்களின் ஒன்றுகூடல்
இருக்குது மச்சான்
கட்டாயம் நான்
போகவேணும்
சொல்லுங்கள் மச்சான்
தாழங்குடா பாடசாலை
மரத்தடியின் நிழலில்
மங்கலமாய் ஒன்றுகூடல்
மண்கமழ்ந்தொலிக்கும்
பிரதேச செயலாளரும்
வர்ராங்களாம் அங்கே
வந்து பலவும் பேசிடவே
விளைகிறோமே இங்கே
கதிரவன் கலைக்கழக
ஒழுங்கமைப்பில் கூடி
பல அனுபவத்தின்
பகிர்வுகளை விருந்தளிக்கப் போறோம்
மண்முனைப் பற்றதனின்
கலைஞரெலாம் அங்கே
பிரதேச பெருமை பேசி
கலைவளர்ப்போம் இங்கே
கலாசார பேரவையின்
பெருமையிலே இன்று
மனமகிழ்ந்து கொள்கிறேனே
மனம் நிறைவாயின்று
------------------
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment