அன்பு

 அன்பு

##### 


நேற்றும் இன்றும் நாளையும்

அன்புதான் ஒன்றாய்

அரவணைத்துக் கதை பேசும் 


தாயவள் அன்பு

சேயுடன் கதை பேசும்

தந்தையின் அன்பு

தாரகை வரமாகும் 


பிள்ளையின் அன்பு

பிடிவாத குணமாகும்

பெரியோரின் பண்போ

பேரின்ப வரமாகும் 


கேட்டதைக் கொடுத்தல்

அன்பாய் மலருமோ

கொட்டிய வார்த்தைகள்

விட்டெறிந்தோடுமோ 


விட்டுக் கொடுத்தல்

விண்ணையும் தாண்டும்

தட்டிக் கொடுத்தல்

தரணியைக் காக்கும் 


மூலை முடுக்கெலாம் 

முடங்கி கிடப்பேனும்

பாதை வழிதொறும்

பறந்தே கழிப்பினும் 


அன்பின் துணையதே

அரவணைப்பாகிடும்

அல்லல் விட்டொரு

அருளும் தந்திடும் 


முடிவுடன் கூடி நாம்

அன்பால் தேற்றுவோம்

முற்றுகையிட்டொரு

முரசமும் கொட்டுவோம் 


அன்பை அன்பால்

அன்பு செய்யும்

அன்பே அன்பு 


________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

மட்/கிரான்குளம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை