தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்
****************************
தீபத்தால் ஒளிபரப்பி
வரிசையிடும் தீபாவளியே
இம்முறையேனும்
இணங்கியொரு தீர்வாகுமா
இலங்கையின் இன்னலுக்கு
தித்திப்பாய் வாழ்விலே
தீர்வொன்று கிடைக்கும்
திறனுயர்ந்து என்றென்றும்
உயரட்டும் புவியோர்கள்
தீந்தமிழ் கானம் பாடி
கனிவுகள் மலரட்டும்
எண்ணத்தின் அலைகளவை
திசையெல்லாம் மிளிரட்டும்
தீபாவளித் தினமோங்கி
தீண்டாமை விலகட்டும்
தீராத ஆசை விட்டு
திசைகலெலாம் மலரட்டும்
திரவியங்கள் இயக்குவித்து
மனவலிகள் தீரட்டும்
தீவு ஒன்றாய் இணையவிட்டு
தீர்க்கமுற்று ஓங்கட்டும்
தீபமாய் உயரமேறி
திண்மையுடன் மிளிரட்டும்
தித்திக்கும் தேன்கலந்து
இனிய மொழி பேசட்டும்
திகட்டாத தெள்ளமுதாய்
திகைப்பிழந்து வாழட்டும்
தீபாவளியே வருக
தீபத்தாலொளி தருக
தித்திப்பாய் சுடர் விடுக
தீரா உறவு பெறுக
அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
______________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான் குளம்
ஈழம்
Comments
Post a Comment