சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
எழில் மிகுந்த சிற்பங்களால்
தங்கி வாழும் கூடுதன்னை
எண்ணங்களால் வண்ணமாக்கி
எல்லையற்று நிற்கின்றீர்
சுதையினால் வடிவமைத்து
சுடரென வெளிக்கிறது
சிகரமெனும் சின்னமாகி
உங்களின் கைவரிசை
விமானத்தை விந்தை செய்து
வசந்த மடம் வண்ணமாகி
முன்னெளில் மண்டபமும்
கதைபேசிக் களிக்கின்றன
அர்த்தமுள்ள வார்த்தை கொண்டு
உம் பணியை கலைப்பணியாய்
இன்பமுறச் செய்கிறீரே
நிகரேது உன் படைப்பதற்கு
நிழலாகி பயணிக்கும்
எங்கள் வாழ்வுயாவும்
சிலைவடிவுச் சின்னமெலாம்
கலைப் பணியை வாழ்த்துகிறோம்
கருணையுடன் மெச்சுகிறோம்
நிறைவுமிகு செல்வமாகி
நினைவெல்லாம் வடிவமாகி
உருவமதன் ரூபமாகி
இனி வரும் காலமெல்லாம்
இனிய வாழ்வு பேசட்டும்
_________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment