கிரான்குளத்தூர் கவிஞனுக்கு இளங்கலைஞர் விருது
கிரான்குளத்தூர் கவிஞனுக்கு இளங்கலைஞர் விருது
மட்டக்களப்பு கிரான்குளத்தூர் கலைஞர் கவிஞர் ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்) அவர்கள் கிழக்கு மாகாண பண்பாட்டு வால்கள் திணைக்களத்தினால் 2026 ஆம் ஆண்டில் இளங் கலைஞர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு 28.10.2026 அன்று Golden River Hotel இல்நடைபெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழாவிலே கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.N.மணிவண்ணன் அவர்களால் கிழக்குமாகாண ஆளுனர் பேரா.ஜயந்தலால் ரத்னசேகர, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், தனன்ஜெயன் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.மேனகா புவிக்குமார் ஆகியோரின் பிரசன்னத்துடன் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள், வித்தகர்கள், சிறந்த நூல் விருது பெற்றவர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும். கவிஞர் ரவிகிருஷ்ணா அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி விருது, ஆயிரம் கவிஞர்கள் உலக சாதனை விருது என்பவற்றைப் பேற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது






Comments
Post a Comment