பசி

பசி

முரண்படுவோனுக்கு
கோபத்தில் பசி
சமூக சேவகனுக்கு
சமூக நேர்த்தியில்; பசி

கற்பிப்போனுக்கு
பாடப்பரப்பில் பசி
கற்போனுக்கு
நினைவூட்டலில் பசி

வியாபாரிகட்கு
விற்றுமுடிப்பதில் பசி
சாத்திரகாரனுக்கு
வாடிக்கையாளரில் பசி

விளையாட்டு வீரனுக்கு
வென்று முடிப்பதில் பசி
விவசாயக்காரனுக்கு
பயிரின் விளைச்சலில் பசி

கடல் பிரயாணிக்கு
கரையைக் காண்பதில் பசி
குழந்தை பெற்றவனுக்கு
நன்றாய் வளர்ப்பதில் பசி

நட்பைப் புரிந்தவனுக்கு
நண்பரைக் காண்பதில் பசி
வயதாகி வருந்துவோனுக்கு
உயிரை பிரிவதில் பசி
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம்
மட்டக்களப்பு

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025