சென்று வந்தேன்
சென்று வந்தேன்
என் சிறுவயது அப்போது
எனது
தம்பியும் நானும்
ஆற்றங்கரைத் தீவை
நோக்கிய பயணம்
அண்ணாக்களுடன்
தீவின் மேற்கில் வயலும்
அதையும் தாண்டி ஆறும்தான்
தீவின் சொந்க்காரர் வேற்றூர்தான்
ஆனாலும் உள்ளத்தால்
உண்மையும் நேர்மையும்
அன்பும் பாசமும்
கொண்டவர்தான்
தீவின் கிழக்கே சிறு வீதியும்
அதைத் தாண்டி வயல்களும்
நீர்பாய்ச்சல் இடம்பெறும்
நித்த நித்தம் பயிர்களுக்கு
சிறு மண்குடம் தோழில்
தாங்கியபடி
உச்சி வெயில் கொட்ட
தோழில் சுமந்த
முட்டித் தண்ணீர்
வழிந்தோடி உடலெங்கும்
பரவிவர உட்சாகம்
கத்தரிச் செடியின் கனகனப்பும்
மிளகாய்ச் செடியின் மினுமினுப்பும்
வெண்டிச் செடியின் வெளுவெளுப்பும்
பாவைக் கொடியின் காற்றிசைவும்
புடலங்கொடியின் புன்னகையும்
சுரைக் கொடியின் சூரத்தனமும்
தும்பங்காயின் துடிதுடிப்பும்
இன்று கண்களில்
கற்பனையின் ஓவியங்களாய்
மரவள்ளிக் கிழங்கும் மாங்காய்ச் சம்பலும்
அப்பாவுக்கு தெரியாமல்
மரம்வைத்துத் தோண்டிக் கிழங்கெடுத்து
கூட்டாழிகளுடன் கூட்டாஞ் சோறாக்கி
பின்னேரமளவில் வற்றாளைக் கிழங்கும்தான்
சிலநேரம் சோழன் முறித்தவியலிட்டு
கட்டுவிழா கிழங்கெடுத்து அதுவும் ஒரு
விருந்தாகும் அப்போது
இன்று மணி பன்னிரண்டு
வயல்பக்கம் சிறிதாய் ஓர்பயணம்
அதன் அருகாய்த்தான் தீவும்
வயலைப் பார்த்த கணம்
அலைவெடுத்தேன் நிழல்தேடி
அப்போது ஒரு வகைமரம்
கூப்பிட்டாற்போல்
நிழல் நாடினேன்
வாகை சொன்னது
என்னைத் தெரிகிறதா தம்பி
என்றாற்போல் நானே பேசுகிறேன்
தீவின் சிறிதளவு மண்ணும்
இன்று காணோம்
அனைத்தும் வயல்களாகி காட்சியளிக்க
என்மனதில்
கடந்துவந்த சில ஞாபகங்கள்
தீவின் மணல் இன்று
வீடாகியது
தீவின் மண் இன்று
பூச்சாகியது
தீவின் மண் இன்று
பள்ளம் பார்க்கிறது
தீவின் மண் இன்று
அத்திவாரங்களுக்குள் முடங்கிவிட்டது.
உறங்கம் தந்த
தேத்தா மரம் காணேன்
பழம் தந்த
கூழா மரம் காணேன்
கனியெடு காய் தந்ந
ஈச்சை மரம் காணேன்
எஞ்சியது நான் மட்டுமே
அதுவும் அப்போது செடியானதால்
வாகை மரம் சொன்னது
இப்போ இருப்பது
தீவுப் போடியின்
நிழலாய் மட்டுமே.....
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம்
மட்டக்களப்பு
Comments
Post a Comment