அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

 அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾





​கதிரவன் சிரிப்பில் 

விடியலதுபூத்திருக்க

கார்மேகம் பொழிந்தபடி 

மழையதனைத் தேக்கிவைக்க

உழவனன் சிந்தையதன் 

களிப்பதனில் ஆழ்ந்திருக்க

உயிர்கள் யாவும் 

பூமியிலே மகிழ்ந்திருக்க


​வாசல் தெளித்துக் 

கோலம் இட்டு

வண்ணமிகு மலர்களவை 

சூட்டி வைத்து

புதுப்பானை ஏற்றி 

அடுப்புக் கூட்டி

பொங்கலோ பொங்கல் 

என குரலெழுப்பி


​வெல்லப் பாகுதனில் 

அரிசியது நனைய

உள்ளக் கவலை யாவும் 

கரைந்து போக

மஞ்சள் குலைகளவை 

மணம் பரப்பி

மாடல்லவோ செல்வம் 

எனச் சிறப்பிடமாய்


​உழவே உலகதனின் 

அச்சாணி என்று

உணர்த்தும் உன்னதத் 

திருநாள் இன்று

சாதி மதங்கள் 

யாவும் கடந்து

சமத்துவம் ஓங்கிட 

அன்பில் இணைந்து

​புதுமையது பூக்க

பொங்கட்டும் பொங்கல்


புன்னகை சிந்தத் 

ததும்பட்டும் மங்கலம்

வாழும் காலம் 

வளமாகி அமையட்டும்

வாழ்த்துகள் சொல்லிச் சொல்லி 

தித்திப்பு பெருகட்டும்!


🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

கவிஞர் ரவிகிருஷ்ணா 

கிரான் குளம்

மட்டக்களப்பு

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025