நீங்களும் எழுதலாம்


 நீங்களும் எழுதலாம் 

####################

தேசிய மட்ட கவிதைப் போட்டி  திறமைக்கு மகுடம் 


முதலாம் பரிசு -  30,000/-, இரண்டாம் பரிசு - 20,000/- , மூன்றாம் பரிசு - 10,000/-

**************************************************


வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்தும் 


ஔவை விழா- 2026 


தேசிய மட்டக் கவிதை போட்டி 


தலைப்பு : ஔவையின் அறக் கருத்துக்கள் அகிலத்தை வழி நடத்தும்


கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்


1. கவிதைகள் மரபுக் கவிதையாகவோ, அல்லது புதுக்கவிதையாகவோ கருப்பொருள் மாறாமல் இருத்தல் வேண்டும்.


2. கவிதையை ஒரு A4 தாளில் மட்டும் வேறாகவும், கவிதை எழுதுபவரின் சுய விபரம் வேறாகவும் எழுதி அல்லது அச்சிட்டு சுய படைப்பு என்பதை தாங்களே உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்


3. போட்டியில் பங்குபற்றுபவர் இலங்கையில் வசிப்பவராக இருப்பதுடன், ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம். 


4. மரபுக் கவிதையாக இருப்பின் 24 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாக இருப்பின் 32 வரிகளுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 


5. முதலாம் பரிசு : 30,000/-, இரண்டாம் பரிசு: 20,000/- மூன்றாம் பரிசு : 10,000/- வழங்கப்படுவதுடன்  நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அத்துடன் போட்டியில் பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


6. கவிதை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி : 30.04.2026 


7. பதிவுத் தபால் மூலம் கவிதை அனுப்ப வேண்டிய முகவரி கதிரவன் த.இன்பராசா, தலைவர் , கதிரவன் பட்டிமன்றப் பேரவை, புதுக்குடியிருப்பு - 30158, மட்டக்களப்பு.


8. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது


கவிஞர் ரவி கிருஷ்னா

இணைப்பாளர்,

கவிதைப் போட்டி

ஔவை விழா - 2026

0768816749


கதிரவன் த.இன்பராசா

தலைவர்

கதிரவன் பட்டிமன்றப் பேரவை

0759175981

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

என் வீட்டுத் தோட்டம் - சிறுவர் பாடல்