கிரான்குளம் மாரிக்காக ஒரு காவியம்

 கிரான்குளம் மாரிக்காக 

            ஒரு காவியம்

        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தந்தநத நாதநத நாதநத நானா

தனநாத நாதந்த நாதந்த நானா -2 தடவை

கிரான்குளத்தூரிலே நிலைகொண்டு நின்று

கிருபதனை தந்திடும் மாரியென ஆனாய்

உன்பதம் நாடிவரும் அடியவர் கூடியே

உனதருளை பாடியே உலகோர்க்கு சொன்னோம்

தந்தநத .................................................

அன்புடனே வந்தோமே அம்மா உன் பதி சேர

அருளொளியை பொழிந்துமே மாரியே காப்பாய்

பொன்னடி சேர்ந்திட வாழ்வுமே தழைக்கும்

பொலிவுடன் நிற்கும் உன் திருக்கோயில் மலரும்

தந்தநத .................................................

தாயென நினைத்துமே தாழ்ந்திடும் உள்ளம்

தாங்கிடும் சக்தி தரும் மாரியே தாயே

எண்ணங்கள் தூய்மை பெற உனை நாடுமம்மா

என் உயிர் நாயகி நீயானாயம்மா

தந்தநத .................................................

இன்னல்கள் நீக்கிடும் ஈஸ்வரியும் நீயே

இறை அருள் தருவாயே மாரியேயம்மா

கண்ணீர் துடைத்திடும் கருணைமிகு தாயே

காக்கும் கதியான நீ மாரியம்மா

தந்தநத .................................................

மங்களம் தருமே உன் திருநாமமம்மா

மனதினில் என்றுமே ஓங்கட்டுமம்மா

விண்ணகம் கூடும் உன் புகழ் கேட்டு நாங்கள் 

விசும்பிலும் ஓசையது முழங்கவே கண்டோம்

தந்தநத .................................................

உன்னடி சேர்ந்திடும் உயிரவைகள் எல்லாம்

உயர்வு பெறும்  என்றுமே உன்தனருளாலே

பாவங்கள் தீர்க்கும் பாதமது உனதே

பரமனவன் தந்ததொரு பரிசாகுமம்மா

தந்தநத .................................................

ஆயிரம் நாமமது பாடிடும் நாவில்

அன்பொளியை வீசிடுவாய மாரியே அம்மா

உலகெலாம் உன் புகழ் பேசிடும் வேளை

ஒளிவிழி தாயே என்றென்றும் காப்பாய்

தந்தநத .................................................

கனவினிலும் நீயே நினைவினிலும் நீயே

கருணையின் வடிவே  நீ எண்ணமதுவம்மா

துயரங்கள் எல்லாம் தொலைந்திடும் போதும்

துளிர்த்திடும் வாழ்வுமே உந்தனருளாலம்மா

தந்தநத .................................................

நம்பிக்கை தந்துமே நடக்கின்ற பாதை

நல்லதாய் மாறுமே மகமாரி தாயே

அன்பர்கள் கூடிடும் ஆலயமேயம்மா

அருளதன் ஆட்சியே நிலைநிற்குமம்மா

தந்தநத .................................................

விநாயகர் பக்கமாய் அமர்ந்திட்ட தாயே 

விக்கினங்கள் அத்தனையும் தீர்க்க அருள் செய்வாய் 

முத்தமது வந்து தினம் வணங்குவோர் அடியார் 

முத்தி தரும் பாதையதை காட்டுவாய் தாயே

தந்தநத .................................................

சந்தனம் வீசிடும் சந்நதியுமுனதே

சாந்தத்தை நித்தமும் தருகின்ற தாயே

மந்திரம் போலுன் நாமமது சொன்னால் 

மனதினில் ஒலிக்குமுன் நாதமேயம்மா

தந்தநத .................................................

என்றென்றும் காக்கின்ற ஈஸ்வரியும் நீயே

என் உயிர் தெய்வமாய் ஆனவளும் நீயே

பூமியிலே வாழ்ந்திடும் பாவிகள் கூட

புண்ணியம் பெறுவரே உன்னுடைய தயவால்

தந்தநத .................................................

ஆசைகள் எல்லாமே நிறைவேறும் போது

அருள்மிகு மாரியென நீயுமே ஆவாய்

கடலென பெருகுமே கருணையது உனது

எங்களை என்றுமே காத்திடுவாயம்மா 

தந்தநத .................................................

வானமும் பூமியும் சேர்ந்து புகழும்

வாழ்வளிக்கும் எங்களின் மகமாரியம்மா

உன்னடி சேர்ந்திடும் உள்ளமது தானே

உயிருக்கு நிகரான ஆனந்தமம்மா

தந்தநத .................................................

என்றுமே எங்களைக் காக்கின்ற தாயே

இறைவியே மகமாரி  தாயே நீ அருள்வாய்

கலசங்கள் மீதிலே கருணையும் உண்டோ 

உந்தன் அருள் துணை இருக்க வேறேது அம்மா 

தந்தநத .................................................

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கவிஞர் ரவிகிருஷ்ணா

மட்/கிரான்குளம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025