Posts

Showing posts from April, 2025

கிரான்குளத்தூர் மாரியம்மனுக்கு ஒரு பாடல்

Image
  கிரான்குளத்தூர் மாரியம்மனுக்கு                          ஒரு பாடல்                          🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மாரி மாரி மாரி என்று சொல்லுவோம் - அவ  மகமாயி தாயே என்று போற்றுவோம் தேவி தேவி தேவி என்றே கூப்புவோம் அவ  கிரான்குளத்தின் நாயகியாம் வேண்டுவோம்  சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா  சர்வ வல்லமை தேவி அம்மா  எங்கும் நிறைந்தவள் மகமாயி  எங்கள் வேதனை தீர்ப்பவள் கருமாரி  மங்கலம் நிறைந்தவள் மாரியம்மா  எங்கள் நெஞ்சினில் உறைப்பவள் தேவிம்மா  குங்குமம் காப்பவள் ஓங்காரி  எமை என்றும் தொடர்பவள் கைங்காரி  சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................  வெம்மை தணிப்பவள் கருமாரி  எங்கள் வேதனை தீர்ப்பவள் சுகமாரி கிரான்குளத்தூரில் உறைகின்றாள்  அவள் சமயபுரத்தின் மகமாயி  சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................  திருப்பூர் தேவியாய் ஆனவளாம் அவள் பண்ணாரி அம்மன் தேவியளாம்  புன்னை நல்லூ...

தமிழ் உலகம் போற்றும் சுவாமி விபுலானந்தருக்கு ஒரு பாடல்

 தமிழ் உலகம் போற்றும் சுவாமி விபுலானந்தருக்கு ஒரு பாடல்  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  விபுலானந்தர் விபுலானந்தர் விபுலானந்தர் இவர் தமிழானந்தர் ஆன்மீகமும் சமூகமும் கல்வி இலக்கியமும் என்றுமல்லோ மலர்ந்தவர் இவர் உயர்ந்தவர் எங்கள் மனதினிலே என்றும் பதிந்தவர் சாமித்தம்பி கண்ணம்மைக்கு மகனெனவே அவதரித்து மயில்வாகனனெனும் இயற்பெயரதனை பதித்தவர்  காரதீவின் மண்ணினிலே கருத்துடனே இவர் வந்தவராம் கன்னித் தமிழின் புகழனைத்தும் கருத்தினிலேதான் தந்தவராம் வெள்ளை நிற மல்லிகையோ என்று பாடி நின்றவராம் வெள்ளையுள்ள மனங்களையே வேண்டும் வேண்டும் என்றவராம் இவர் பொற்காலம் மலர செய்தவராம்  காரதீவுமண்ணினிலே ........    .  விபுலானந்தர் விபுலானந்தர்............  மரபுத் தமிழ் கல்வி கற்று மறுமொழிகள் பயின்றிருந்தார் ஆசிரியப் பணிதனை இயற்றியவரும் உயர்ந்து நின்றார்  பல்கலையின் பேராசானாய் பணியுயர்வு கண்டிருந்தார் விஞ்ஞான பட்டதாரி விபுலானந்தன் ஆயிருந்தார்  துறவதனில் தான் புகுந்து துயரனைத்தும் துடைத்து நின்றார்  காரதீவுமண்ணினிலே ........    .  விபுலானந்தர் விபுலா...

இயற்கையின் பரிசம்

 இயற்கையின் பரிசம் ##################  காலைப் பனியின் வருடல் கூடி மனமெங்கும்  கட்டியிழுத்து கர்வமிகு நடையெடுத்து செல்லும் காற்றில் கிழி பட்டுச் செல்லும் மனம் ஏதோ எண்ணியபடி தடயங்களை விசாலமிடுகிறது  இதற்கிடையில் வெப்ப வலைவீசி சூரியத் தடங்கள்  ஆர்ப்பரித்த படி பனியிடம் பகையாகி போட்டியிடக் தயாராகி தம் அம்பறாத்துணிகளை கட்டியபடி குறிவைத்தவண்ணம் அகாலித்துக் கொள்கின்றன  காலையின் தென்றல்  கடுகதியாய் வீசிவர பனியுலர்த்தி புன்னகைத்து தலைசிலிர்ப்பி நிற்கும் மரங்கள்  உறவாடிக் களிக்கின்றன தம்மீது பரிசமிடும் பறவைகளின் இசையை கேட்டபடி  கன்றுகளின் கதறலிலே கண்விழித்த பசுக்களவை பாலூட்டி மகிழுகையில் வயல் நோக்கி நகருகிறார் பாட்டாளி மக்களவர் பசுமையுறும் வயல் நிலத்தை நோக்கியபடி  __________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா

செட்டிபாளையம் கண்ணகி அம்மனுக்கு பாடல் 2 (செட்டியூர் கண்ணகி பாடல் - 2)

Image
  செட்டிபாளையம் கண்ணகி அம்மனுக்கு பாடல் 2  (செட்டியூர் கண்ணகி பாடல் - 2) #################################  செட்டியூரிலே கோயில் கொண்டருள் புரிபவள் கண்ணகியாம்  அவள் சிங்கார தோப்பினில் உறைந்திருந்தே அருள் புரிகின்ற நாயகி யாம்  கூடினராம்........ கூடினராம்....... கிரான்குள மக்கள் கூடினராம்  கதவு திறந்தருள் பாடினராம் தோரண ஊர்வலம் செய்தனராம் தோத்தரித்தே அருள் வேண்டினராம்  வைகாசி திங்கள் மதி நிறை நன்னாள் உற்சவம் காணுகிறாள்  கிழக்கு மண்ணிலே பக்தரின் நெஞ்சில் பரவசமூட்டுகிறாள்   கூடினராம்........ கூடினராம்.......  செட்டியூரிலே..............  கடலின் ஒலியிலே கல்லும் நட்டிட  ஆலயம் கண்டவளாம் ஆறு ஊரவர் அரவணைப்பிலே அமர்ந்தருள் புரிபவளாம்  கூடினராம்........ கூடினராம்.......  செட்டியூரிலே..............  கற்புக்கரசியின் கருணையை நம்பி ஆலயம் நாடுகிறோம்  பாவ வினைகளை பழுதிலாமலே அறுத்திடும் பத்தினியாம்  கூடினராம்........ கூடினராம்.......  செட்டியூரிலே..............  புகார் மதுரையொடு வஞ்சிநகரமும் பேசிடும் கண்ணகிய...

செட்டிபாளையம் கண்ணகித் தாய்க்கு சிந்தினால் ஒரு பாமாலை

 செட்டிபாளையம் கண்ணகித் தாய்க்கு சிந்தினால் ஒரு பாமாலை ################################ சற்குருவாம் தும்பிக்கையுடையோனே தொந்திவயிற்றப்பனாம் பிள்ளையாரே செட்டிநகர் பொற்பதமாய் உறைந்திருக்கும் கண்ணகைத் தாயை நான் முன்னிருத்தி காவடிச் சிந்துதனை கற்பகமாய் உன் பொற்பாதம் தரவென்று நான் நினைந்தேன் எந்தன் நெஞ்சினுக்கு நிறைவு செய்வாய் எங்கள் கிரான்குளத்தூர்க் கணபதியே அருள்செய்வாயே  சார்பான கிரான்குளச் சந்நிதியில் வாயலகுமிட்டு முதுகுதனில் முள்ளும் பாய்ச்சி உனைத் தேடிவாறேனம்மா என்கால்கள் வருந்திநிற்க பொற்பதமாய் நீசெய்த கருணைதனை என்றும் நான் மறக்கவே கூடுதில்லை தற்பரமாய் என்னுள் வந்து தயவுடனே நோக்காட்டும் செயலறுத்து அருள்செய்வாயே  சிங்காரத் தோப்பதனில் மரம்சூழ வீற்றிருந்து சிந்தையுடன் வருவோர்க்கு அருளுமெய்தாய் உன்பதத்தை எய்தவென்று நானும் தோழ்தனிலே காவடியும் வருந்திச் சுமந்து வாழ்வுதனை எண்ணிநானும் வாய்மொழியால் உனக்கு ஒரு சிந்து செய்தேன்  மருதமரச் சோலையிலே இலங்கும் தேவி என் கவலைகள் களைந்தெனக்கு அருள்செய்வாயே  சீரான மாந்தருக்குச் சிந்தை செய்து சிற்பரத்தில் வியோகமதாய் ஆகிநின்று விரதமத...

அக்கறைப்பட்டவன்

 அக்கறைப்பட்டவன் ################  அங்கே  ஒரு சாலையோரம்  ஒரு செல்லப்பிராணி  முனகிக் கொண்டு கிடக்கிறது  அதன் மேனியல்லாம்  தளர்ந்து போய்  பசியால் வாடியும்  உடல் மெலிந்தும்  எதையோ எதிர்பார்த்தபடி  போகும்  வரும்  மனிதர்களின்  முகங்களை எல்லாம்  பார்த்துப் பார்த்து   கண்ணீர் வடித்தபடி  இருக்கிறது  யாரும் காணாதபடி  இருக்கையில்  ஒருவன் வருகிறான்  அதனருகே செல்கிறான்  தடவுகிறான்  ஏதேதோ மொழி பேசுகிறான் அவன்  பையில் இருந்து  எதையோ எடுத்து  கொட்டுகிறான்  அந்த பிராணி  ஆவலோடு  அவசர அவசரமாக  உண்டு களிக்கிறது பசியாறி  இருக்கும் போல  மறுபடியும்  உறக்கம் கொள்கிறது  அவன்  மீண்டும் நிற்கிறான் அதன்  செயலுக்காக காத்தபடி  அதனை உற்று நோக்கியபடி  அவனோடு  அழைத்துச்  செல்வதற்கோ என்னவோ அக்கறைப்பட்டவன் தான்  __________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா

முயன்று முன்னேறு

 முயன்று முன்னேறு ~~~~~~~~~~~~~~  இன்று போன சூரியன் நாளையும் வருவான்  இந்த எத்தனங்கள்  எதிர்பார்க்காமலேயே எங்களுக்குள்  இரவு வந்ததென்று நிலவு நீங்கிச் செல்லுமோ ஒளியின் வீச்சு பிரகாசிக்க அக்கணங்கள்  செயலூக்கமாக  தேய்கிறேன் என்பதற்காய் தேன்நிலா தேய மறுத்ததில்லை உதிரும் பூக்கள் மலர மறுத்ததில்லை கடலலைகள் மீண்டும் மீண்டும் அதையே செயாகின்றன வலியும் கடந்து குழந்தையை தருகின்ற தாயின் அன்பும் அப்படித்தான்  முயலுங்கள் திருவினையாக்கும்  பயிலுங்கள் பண்பாகி வரும்  __________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா

வானப் பறவையும் நானும்

 வானப் பறவையும் நானும் ======================= வான ஓடத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒருசில பொழுதுகள் தான் நடந்தேறுகிறது  எங்கள் ஊரில் பரந்த நிலமுண்டு ஆயினும் இறங்கியதில்லை இதுவரை எந்த ஓடமும்  நினைவு மலர்ந்த நாட்களிலும்  ஓடியிருக்கிறேன் தாழப் பறந்த  உலங்கு வானூர்தியின் பின்னே  குடு குடு ஒலி கேட்டு என்னை மறந்தோடி காயவைத்த நெல்லும் தெறித்து விழுந்தெழும்பி அடியும் பட்டிருக்கிறேன்  முத்தைநாள் தொட்டுணர்ந்தேன் அதன் பம்பரங்கள் சுற்றினும் சில்லுகள் உருளினும் விளையாட்டு விமானம் என்ன விமானமா? வைகாசி சடங்கில்  வாங்கியதுதான் இன்னமும் வீட்டில்  பறந்துகொண்டுதான் இருக்கிறது  ====================== கவிஞர் ரவிகிருஷ்ணா

அன்பின் அடையாளம் எங்கள் மூத்தம்மா

 அன்பின் அடையாளம் எங்கள் மூத்தம்மா °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°  மூத்தம்மா (பாட்டி )என்னும்  ஆழமான வரிகளுக்குள்  புதைந்து கிடக்கிறது எங்கள் உள்ளம்!  நாற்பது வயது கடப்பினும்  பேரனையும் குழந்தையாய் தலைக்கோதும் உறவு எங்கள் மூத்தம்மா!  எளிமைமிகு வாழ்க்கையின் சந்தோசத்தை அள்ளி வழங்கும்  உறவு எங்கள் மூத்தம்மா!  இன்று தூரமாய் இருந்தாலும் என்றென்றும் மூத்தம்மாவின் நினைவோடு ஏதோ ஒரு அனுபவத்தை மீட்டுகிறது என்னுள்ளம்!  வீடு முழுக்க சாப்பாடு இருந்தும்  என் சுவையரும்புகள் தேடுவது என்னவோ மூத்தம்மாவின் கையால்  ஒரு பிடி உணவுதான்!  பாசத்தோடு பரிமாறும் அந்த உணவு  சிறிதளவாயினும் வயிறு நிரம்பிய திருப்தி எங்களுக்குள்  குறும்புகளை செய்து நாங்கள் தாயவள் துரத்துகையில் அடைக்கலம் தேடுமிடம்  மூத்தம்மாவின் மடியதைத்தான்!  மகன்கள் கொடுக்கும் பணமெல்லாம் சேர்த்து வைத்து அவ வாங்கித்தரும் அழகான மிட்டாய்கள்  தங்கவிலையிலும் பெறுமதிதான்!  விரல்களை கோர்த்துத்துக்கொண்டு மூத்தம்மாவுடன் சென்ற பயனங்கள் எண்ணங்க...

காத்துக் கிடக்கும் நாற்காலி

 காத்துக் கிடக்கும் நாற்காலி ~~~~~~~~~~~~~~~~~~~~ காத்துக் கிடக்கிறது நாற்காலி ஒன்று எங்கள் வகுப்பறையில் எங்களை கற்பித்த ஆசான் அமர்ந்திருந்த நாற்காலி தான் அவரது தகுதியை பெறாமல்  அவரது குணநலத்தை பெறாமல்  நான் அதில் அமர்ந்து கொள்ள விரும்பவில்லை  எத்தனை தடைகளை தாண்டி கற்று வந்தவர் எத்தனை நூல்கள் எத்தனை வாசகங்கள் எல்லாம் அவர் மனதில்  நல்லுறு ஆசானாய் அன்று வீற்றிருந்தவர்  அந்த நாற்காலியில் வீற்றிருக்க எனக்கு தகுதி வேண்டாமா அவ்வாறு இருக்க நான் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும் எனக்கான தகுதி இருந்தால் முயன்று பார்க்கலாம்  ஆனால் மற்றவர்கள் நாலு கால் மரக்கட்டை என்று பேசுகிறார் உண்மைதான் என் ஆசான் அமர்வதற்கு முன்  அது மரக்கட்டைதான்  இன்று அவரது நல்லிருப்பு கண்டு பூரித்துப் போய் இருக்கிறது இன்னொரு நல்லாசான் வருகைக்காக  இருக்க நல்லாசான் இயல்பு கொண்டு இருக்கும் காலத்தை நீடித்துப் பார்க்கிறேன் அவர் போல் வர என்னால் முடியவில்லை இருப்பினும்  முயற்சிகள் தொடர்கிறது அவரை போல் நானும் ஓர் நல்லாசானாய் வரும் வரை  அடித்துக் கொள்ள மாட்டேன் எடுத்துக்கொள்ள மாட...

வயல் பயணம்

 கிராமியம் - 08 ############  வயல் பயணம் =============  குக்குக்கூ குயிலு கூவும்  விடியச்சாம வேளையில வயல்ப்பக்கம் போறவரே கொஞ்சம் நில்லுங்க நான் சொல்லும் சேதியத கேட்டுத்துப் போங்க நீங்க கேட்டுத்துப் போங்க  மழையது பொழிகையில  மறைப்புல தான் நிண்டுக்கிங்க  வெயிலது கூடும் காலம்  வெளியிலயே திரிய வேண்டாம் சாயங்கால நேரத்துல  வயல் கருமம் பார்த்திடுங்க  சொன்னத கேட்டிங்கண்ணா  நம்ம கொலம் வாழுமையா  சொன்னத கேட்டிங்கண்ணா  நம்ம கொலம் வாழுமையா  வரம்புல நடக்கையில  வழுக்கிடாம பாத்துக்கங்க  வக்கடையும் வெட்டியிருக்கு  வண்ணமாக பார்த்துக்குங்க  மறுபடிதான் வரணுமுண்ணு  மணிக் கணக்கில் நிக்காதீங்க  கெதியில திரும்பி வாங்க  நீலக்குயில் காத்திருக்கேன்  கெதியில திரும்பி வாங்க  நீலக்குயில் காத்திருக்கேன்  நீரோடை பக்கமெல்லாம்  நினைச்சவுடன் போகாதீங்க  கொளமது நிறைஞ்சிருக்கு பக்கமெல்லாம் பார்த்துக்கங்க  அன்னம்மா சொன்னாவுங்க  அங்கால பக்கம் போக வேணாம் என்னோட போய்க்கலாம்  எப்பவோ என்ற...