முயன்று முன்னேறு
முயன்று முன்னேறு
~~~~~~~~~~~~~~
இன்று போன சூரியன் நாளையும் வருவான்
இந்த எத்தனங்கள்
எதிர்பார்க்காமலேயே எங்களுக்குள்
இரவு வந்ததென்று நிலவு நீங்கிச் செல்லுமோ
ஒளியின் வீச்சு பிரகாசிக்க அக்கணங்கள்
செயலூக்கமாக
தேய்கிறேன் என்பதற்காய் தேன்நிலா தேய மறுத்ததில்லை
உதிரும் பூக்கள் மலர மறுத்ததில்லை
கடலலைகள் மீண்டும் மீண்டும் அதையே செயாகின்றன
வலியும் கடந்து குழந்தையை தருகின்ற தாயின் அன்பும் அப்படித்தான்
முயலுங்கள் திருவினையாக்கும்
பயிலுங்கள் பண்பாகி வரும்
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment