செட்டிபாளையம் கண்ணகி அம்மனுக்கு பாடல் 2 (செட்டியூர் கண்ணகி பாடல் - 2)
செட்டிபாளையம் கண்ணகி அம்மனுக்கு பாடல் 2
(செட்டியூர் கண்ணகி பாடல் - 2)
#################################
செட்டியூரிலே கோயில் கொண்டருள் புரிபவள் கண்ணகியாம்
அவள் சிங்கார தோப்பினில் உறைந்திருந்தே அருள் புரிகின்ற நாயகி யாம்
கூடினராம்........ கூடினராம்.......
கிரான்குள மக்கள் கூடினராம்
கதவு திறந்தருள் பாடினராம்
தோரண ஊர்வலம் செய்தனராம் தோத்தரித்தே அருள் வேண்டினராம்
வைகாசி திங்கள் மதி நிறை நன்னாள்
உற்சவம் காணுகிறாள்
கிழக்கு மண்ணிலே பக்தரின் நெஞ்சில் பரவசமூட்டுகிறாள்
கூடினராம்........ கூடினராம்.......
செட்டியூரிலே..............
கடலின் ஒலியிலே கல்லும் நட்டிட
ஆலயம் கண்டவளாம்
ஆறு ஊரவர் அரவணைப்பிலே
அமர்ந்தருள் புரிபவளாம்
கூடினராம்........ கூடினராம்.......
செட்டியூரிலே..............
கற்புக்கரசியின் கருணையை நம்பி ஆலயம் நாடுகிறோம்
பாவ வினைகளை பழுதிலாமலே அறுத்திடும் பத்தினியாம்
கூடினராம்........ கூடினராம்.......
செட்டியூரிலே..............
புகார் மதுரையொடு வஞ்சிநகரமும் பேசிடும் கண்ணகியாம்
சேர சோழரோடு பாண்டிய மன்னரையும் புகழ்பெறச் செய்தவளாம்
கூடினராம்........ கூடினராம்.......
செட்டியூரிலே..............
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/கிரன்குளம்

Comments
Post a Comment