கிரான்குளத்தூர் மாரியம்மனுக்கு ஒரு பாடல்
கிரான்குளத்தூர் மாரியம்மனுக்கு
ஒரு பாடல்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மாரி மாரி மாரி என்று சொல்லுவோம் - அவ
மகமாயி தாயே என்று போற்றுவோம் தேவி தேவி தேவி என்றே கூப்புவோம் அவ
கிரான்குளத்தின் நாயகியாம் வேண்டுவோம்
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா
சர்வ வல்லமை தேவி அம்மா
எங்கும் நிறைந்தவள் மகமாயி
எங்கள் வேதனை தீர்ப்பவள் கருமாரி
மங்கலம் நிறைந்தவள் மாரியம்மா
எங்கள் நெஞ்சினில் உறைப்பவள் தேவிம்மா
குங்குமம் காப்பவள் ஓங்காரி
எமை என்றும் தொடர்பவள் கைங்காரி
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................
வெம்மை தணிப்பவள் கருமாரி
எங்கள் வேதனை தீர்ப்பவள் சுகமாரி கிரான்குளத்தூரில் உறைகின்றாள்
அவள் சமயபுரத்தின் மகமாயி
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................
திருப்பூர் தேவியாய் ஆனவளாம் அவள் பண்ணாரி அம்மன் தேவியளாம்
புன்னை நல்லூரில் கோயில் கொண்டாள் அவள் பூதலதோர் புகழ் காப்பவளாம்
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................
உத்தரகோச மங்கைளாம் அவள் அகிலாண்டேஸ்வரி நாயகியாம்
அங்காள பரமேஸ்வரியாம்
அவள் அகிலமெல்லாம் காக்கும் அஞ்சலியாம்
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................
அட்சர சுந்தரி அந்தரி அம்பாள் இந்திர ராட்சசி நாயகியாம்
வேப்பிலை காரியம் ஜெகதாம்பாள் அவ பெரியநாயகி இந்திராணி
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................
வனதுர்க்கையாம் அம்பிகையே அவள் வரதாதேவி மனதுர்கா
மரகத சொரூபியாம் மீனாட்சி அவ ரூபினி பார்வதி தேவியளாம்
சஞ்சலம் தீர்ப்பவள் மாரியம்மா ..................
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments
Post a Comment