அக்கறைப்பட்டவன்
அக்கறைப்பட்டவன்
################
அங்கே
ஒரு சாலையோரம்
ஒரு செல்லப்பிராணி
முனகிக் கொண்டு கிடக்கிறது
அதன் மேனியல்லாம்
தளர்ந்து போய்
பசியால் வாடியும்
உடல் மெலிந்தும்
எதையோ எதிர்பார்த்தபடி
போகும்
வரும்
மனிதர்களின்
முகங்களை எல்லாம்
பார்த்துப் பார்த்து
கண்ணீர் வடித்தபடி
இருக்கிறது
யாரும் காணாதபடி
இருக்கையில்
ஒருவன் வருகிறான்
அதனருகே செல்கிறான்
தடவுகிறான்
ஏதேதோ மொழி பேசுகிறான்
அவன்
பையில் இருந்து
எதையோ எடுத்து
கொட்டுகிறான்
அந்த பிராணி
ஆவலோடு
அவசர அவசரமாக
உண்டு களிக்கிறது
பசியாறி
இருக்கும் போல
மறுபடியும்
உறக்கம் கொள்கிறது
அவன்
மீண்டும் நிற்கிறான்
அதன்
செயலுக்காக காத்தபடி
அதனை உற்று நோக்கியபடி
அவனோடு
அழைத்துச்
செல்வதற்கோ என்னவோ
அக்கறைப்பட்டவன் தான்
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment