காத்துக் கிடக்கும் நாற்காலி

 காத்துக் கிடக்கும் நாற்காலி

~~~~~~~~~~~~~~~~~~~~

காத்துக் கிடக்கிறது நாற்காலி ஒன்று எங்கள் வகுப்பறையில்

எங்களை கற்பித்த ஆசான் அமர்ந்திருந்த நாற்காலி தான்

அவரது தகுதியை பெறாமல் 

அவரது குணநலத்தை பெறாமல் 

நான் அதில் அமர்ந்து கொள்ள விரும்பவில்லை 


எத்தனை தடைகளை தாண்டி கற்று வந்தவர்

எத்தனை நூல்கள் எத்தனை வாசகங்கள் எல்லாம் அவர் மனதில் 

நல்லுறு ஆசானாய் அன்று வீற்றிருந்தவர் 


அந்த நாற்காலியில் வீற்றிருக்க எனக்கு தகுதி வேண்டாமா

அவ்வாறு இருக்க நான் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்

எனக்கான தகுதி இருந்தால்

முயன்று பார்க்கலாம் 


ஆனால் மற்றவர்கள்

நாலு கால் மரக்கட்டை

என்று பேசுகிறார்

உண்மைதான் என் ஆசான் அமர்வதற்கு முன் 

அது மரக்கட்டைதான் 


இன்று அவரது நல்லிருப்பு கண்டு

பூரித்துப் போய் இருக்கிறது

இன்னொரு நல்லாசான் வருகைக்காக 


இருக்க நல்லாசான் இயல்பு கொண்டு

இருக்கும் காலத்தை நீடித்துப் பார்க்கிறேன்

அவர் போல் வர என்னால் முடியவில்லை

இருப்பினும் 

முயற்சிகள் தொடர்கிறது அவரை போல் நானும் ஓர் நல்லாசானாய் வரும் வரை 


அடித்துக் கொள்ள மாட்டேன் எடுத்துக்கொள்ள மாட்டேன் 

சுரண்டிக் கொள்ள மாட்டேன் 


என் தகுதிக்கான பயணம் முயற்சி பயிற்சி என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும் 


__________________________

கவிஞர் ரவிகிருஷ்ணா 

மட்/கிரான்குளம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை