அன்பின் அடையாளம் எங்கள் மூத்தம்மா
அன்பின் அடையாளம் எங்கள் மூத்தம்மா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூத்தம்மா (பாட்டி )என்னும்
ஆழமான வரிகளுக்குள்
புதைந்து கிடக்கிறது
எங்கள் உள்ளம்!
நாற்பது வயது கடப்பினும்
பேரனையும் குழந்தையாய் தலைக்கோதும் உறவு எங்கள் மூத்தம்மா!
எளிமைமிகு வாழ்க்கையின் சந்தோசத்தை அள்ளி வழங்கும்
உறவு எங்கள் மூத்தம்மா!
இன்று தூரமாய் இருந்தாலும் என்றென்றும் மூத்தம்மாவின் நினைவோடு ஏதோ ஒரு அனுபவத்தை மீட்டுகிறது என்னுள்ளம்!
வீடு முழுக்க சாப்பாடு இருந்தும்
என் சுவையரும்புகள் தேடுவது என்னவோ மூத்தம்மாவின் கையால்
ஒரு பிடி உணவுதான்!
பாசத்தோடு பரிமாறும் அந்த உணவு
சிறிதளவாயினும் வயிறு
நிரம்பிய திருப்தி எங்களுக்குள்
குறும்புகளை செய்து நாங்கள்
தாயவள் துரத்துகையில்
அடைக்கலம் தேடுமிடம்
மூத்தம்மாவின் மடியதைத்தான்!
மகன்கள் கொடுக்கும் பணமெல்லாம் சேர்த்து வைத்து அவ வாங்கித்தரும் அழகான மிட்டாய்கள்
தங்கவிலையிலும் பெறுமதிதான்!
விரல்களை கோர்த்துத்துக்கொண்டு மூத்தம்மாவுடன் சென்ற பயனங்கள் எண்ணங்களாய் என்றென்றும்!
பசியுடன் இருக்கை கண்டு
அம்மாவை பேசிவிட்டு
ஊட்டி உடனிருந்து
மகிழ்ந்தே கழிக்குமுள்ளம் அவளுக்கு
இன்று எம்மோடு இல்லை
எங்கள் பிரார்த்தனையில் என்றும் மூத்தம்மாவின் பெயர் இல்லாமல் இல்லை!
எளிமையான வாழ்க்கையை அழகாக வாழ்ந்துமுடித்த பாசத்தின் இளவரசி எங்கள் மூத்தம்மா!
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment