இயற்கையின் பரிசம்
இயற்கையின் பரிசம்
##################
காலைப் பனியின்
வருடல் கூடி மனமெங்கும்
கட்டியிழுத்து
கர்வமிகு நடையெடுத்து
செல்லும் காற்றில்
கிழி பட்டுச் செல்லும்
மனம்
ஏதோ எண்ணியபடி
தடயங்களை
விசாலமிடுகிறது
இதற்கிடையில்
வெப்ப வலைவீசி
சூரியத் தடங்கள்
ஆர்ப்பரித்த படி
பனியிடம் பகையாகி
போட்டியிடக் தயாராகி
தம் அம்பறாத்துணிகளை
கட்டியபடி
குறிவைத்தவண்ணம்
அகாலித்துக் கொள்கின்றன
காலையின் தென்றல்
கடுகதியாய் வீசிவர
பனியுலர்த்தி புன்னகைத்து
தலைசிலிர்ப்பி நிற்கும்
மரங்கள்
உறவாடிக் களிக்கின்றன
தம்மீது பரிசமிடும்
பறவைகளின் இசையை
கேட்டபடி
கன்றுகளின் கதறலிலே
கண்விழித்த பசுக்களவை
பாலூட்டி மகிழுகையில்
வயல் நோக்கி நகருகிறார்
பாட்டாளி மக்களவர்
பசுமையுறும் வயல் நிலத்தை
நோக்கியபடி
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment