தமிழ் உலகம் போற்றும் சுவாமி விபுலானந்தருக்கு ஒரு பாடல்
தமிழ் உலகம் போற்றும் சுவாமி விபுலானந்தருக்கு ஒரு பாடல்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விபுலானந்தர் விபுலானந்தர் விபுலானந்தர் இவர் தமிழானந்தர்
ஆன்மீகமும் சமூகமும் கல்வி இலக்கியமும் என்றுமல்லோ
மலர்ந்தவர் இவர் உயர்ந்தவர் எங்கள் மனதினிலே என்றும் பதிந்தவர்
சாமித்தம்பி கண்ணம்மைக்கு மகனெனவே அவதரித்து
மயில்வாகனனெனும் இயற்பெயரதனை பதித்தவர்
காரதீவின் மண்ணினிலே கருத்துடனே இவர் வந்தவராம்
கன்னித் தமிழின் புகழனைத்தும் கருத்தினிலேதான் தந்தவராம்
வெள்ளை நிற மல்லிகையோ
என்று பாடி நின்றவராம்
வெள்ளையுள்ள மனங்களையே
வேண்டும் வேண்டும் என்றவராம்
இவர் பொற்காலம் மலர செய்தவராம்
காரதீவுமண்ணினிலே ........ .
விபுலானந்தர் விபுலானந்தர்............
மரபுத் தமிழ் கல்வி கற்று மறுமொழிகள் பயின்றிருந்தார்
ஆசிரியப் பணிதனை இயற்றியவரும் உயர்ந்து நின்றார்
பல்கலையின் பேராசானாய் பணியுயர்வு கண்டிருந்தார்
விஞ்ஞான பட்டதாரி விபுலானந்தன் ஆயிருந்தார்
துறவதனில் தான் புகுந்து துயரனைத்தும் துடைத்து நின்றார்
காரதீவுமண்ணினிலே ........ .
விபுலானந்தர் விபுலானந்தர்............
அண்ணாமலை பல்கலையின் பேராசானாய் முதலிருந்தார்
அறிவுடை கதைகளெல்லாம் அருமையுடன் அளித்திருந்தார்
தன்னார்வம் தளைத்தோங்கி
தமிழ் தொண்டைச் செய்திருந்தார்
அறிவியலும் தமிழியலும் இணைத்துமல்லோ இசைகொடுத்தார்
யாழ்நூலை எழுதுவித்தார் யாழினையே மீட்டெடுத்தார்
காரதீவுமண்ணினிலே ........ .
விபுலானந்தர் விபுலானந்தர்............
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
என்று அவர் பாடியல்லோ எங்களுளம்தான் புகுந்தார்
நாடகத் தமிழதனை நலிவுறாது வளர்த்தெடுத்தார்
மூன்றியல் வகுத்தெடுத்து
முழுநிலவாய்த் தோற்றுவித்தார்
மொழிபெயர் ஞானியென தெளிந்த கதை சொல்லி வந்தார்
காரதீவுமண்ணினிலே ........ .
விபுலானந்தர் விபுலானந்தர்............
இலக்கிய கட்டுரைகள் இனிதெனவே தருகுவித்தார்
மொழியிலாய்வு செய்திருந்தார் சோழம் ஈழம் என்றுரைத்தார்
தில்லையின் திருநடனம் நடராஜவடிவமென உரையினிலே உவந்தளித்தார்
அகராதி வரிசையிலே அறப்பணியும் ஆற்றிநின்றார்
இவரது முயற்சிகளோ நிலைபேறாய் நிலைத்திருக்கும்
பொக்கிசமாம் பொக்கிசமாம்
பொக்கிசமாம் எங்களுக்கு
காரதீவுமண்ணினிலே ........ .
விபுலானந்தர் விபுலானந்தர்............
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/கிரான்குளம்
இலங்கை
Comments
Post a Comment