வயல் பயணம்
கிராமியம் - 08
############
வயல் பயணம்
=============
குக்குக்கூ குயிலு கூவும்
விடியச்சாம வேளையில
வயல்ப்பக்கம் போறவரே
கொஞ்சம் நில்லுங்க
நான் சொல்லும் சேதியத
கேட்டுத்துப் போங்க
நீங்க கேட்டுத்துப் போங்க
மழையது பொழிகையில
மறைப்புல தான் நிண்டுக்கிங்க
வெயிலது கூடும் காலம்
வெளியிலயே திரிய வேண்டாம் சாயங்கால நேரத்துல
வயல் கருமம் பார்த்திடுங்க
சொன்னத கேட்டிங்கண்ணா
நம்ம கொலம் வாழுமையா
சொன்னத கேட்டிங்கண்ணா
நம்ம கொலம் வாழுமையா
வரம்புல நடக்கையில
வழுக்கிடாம பாத்துக்கங்க
வக்கடையும் வெட்டியிருக்கு
வண்ணமாக பார்த்துக்குங்க
மறுபடிதான் வரணுமுண்ணு
மணிக் கணக்கில் நிக்காதீங்க
கெதியில திரும்பி வாங்க
நீலக்குயில் காத்திருக்கேன்
கெதியில திரும்பி வாங்க
நீலக்குயில் காத்திருக்கேன்
நீரோடை பக்கமெல்லாம்
நினைச்சவுடன் போகாதீங்க
கொளமது நிறைஞ்சிருக்கு பக்கமெல்லாம் பார்த்துக்கங்க
அன்னம்மா சொன்னாவுங்க
அங்கால பக்கம் போக வேணாம் என்னோட போய்க்கலாம்
எப்பவோ என்று காத்திருக்கிறேன்
என்னோட போய்க்கலாம்
எப்பவோ என்று காத்திருக்கிறேன்
______________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment