வானப் பறவையும் நானும்
வானப் பறவையும் நானும்
=======================
வான ஓடத்துக்கும்
எனக்கும் உள்ள தொடர்பு
ஒருசில பொழுதுகள் தான்
நடந்தேறுகிறது
எங்கள் ஊரில்
பரந்த நிலமுண்டு
ஆயினும் இறங்கியதில்லை
இதுவரை எந்த ஓடமும்
நினைவு மலர்ந்த
நாட்களிலும்
ஓடியிருக்கிறேன்
தாழப் பறந்த
உலங்கு வானூர்தியின் பின்னே
குடு குடு ஒலி கேட்டு
என்னை மறந்தோடி
காயவைத்த நெல்லும் தெறித்து
விழுந்தெழும்பி
அடியும் பட்டிருக்கிறேன்
முத்தைநாள் தொட்டுணர்ந்தேன்
அதன் பம்பரங்கள் சுற்றினும்
சில்லுகள் உருளினும்
விளையாட்டு விமானம் என்ன
விமானமா?
வைகாசி சடங்கில்
வாங்கியதுதான்
இன்னமும் வீட்டில்
பறந்துகொண்டுதான் இருக்கிறது
======================
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment