கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 12
கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 12
==================================
அறுகம்புல்லில் மாலை கட்டி அவனை வேண்டுவோம்
அருள் கொடுக்கும் ரகசியத்தை கேட்டு வாங்குவோம்
அரச மரத்தின் நிழல் தனிலே வீற்றிருக்கிறான் அவன்
அடிவரின் குறையனைத்தும் தீர்த்து வைக்கிறான்
கணபதி தீர்த்து வைக்கிறான்
கணபதி....... கணபதி.......
கணபதி....... கணபதி.......
குருபதி......... குருபதி.........
குருபதி......... குருபதி.........
எங்கள் குருபதி
கிரான்குளத்தில் கோயில் கொண்டான் கிருபை கணபதி
கிழக்குவானே அவனுக்கென்றும் உதயப் பெருநிதி
மக்களுளம் கொள்ளை கொண்ட மன்னனுமவனே
மறை முதல்வனாகி காட்சி தரும் முதல் கரிமுகனே
முதல் கரிமுகனே
அறுகம்புல்லில் ............
கணபதி....... கணபதி.......
கணபதி....... கணபதி.......
குருபதி......... குருபதி.........
குருபதி......... குருபதி.........
எங்கள் குருபதி
முதல் வணக்கம் செய்து நாங்கள் கருமமாற்றுவோம்
முந்தி நின்று அவன் பதத்தை தேடி நாடுவோம்
பிள்ளையாக வந்து நின்று பிணக்கறுப்பவன் அவன்
வினை அறுத்து வாழ்வு தன்னை உயரச் செய்பவன்
இவன் உயரச் செய்பவன்
அறுகம்புல்லில் ............
கணபதி....... கணபதி.......
கணபதி....... கணபதி.......
குருபதி......... குருபதி.........
குருபதி......... குருபதி.........
எங்கள் குருபதி
கிரான்குளத்தூர் மக்கள் மனம் நிறைந்திருக்கிறான்
என்றும்
நிறைந்த வாழ்வு தன்னையுமே அள்ளிக் கொடுக்கிறான்
கூடினாங்கள் தேடியவனின் பாதம் போற்றுவோம்
குவலயத்தோர் வாழ்வு மலர கூடிப் பாடுவோம்
நாங்கள் கூடி பாடுவோம்
அறுகம்புல்லில் ............
கணபதி....... கணபதி.......
கணபதி....... கணபதி.......
குருபதி......... குருபதி.........
குருபதி......... குருபதி.........
எங்கள் குருபதி
____________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
திரு கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/கிரான்குளம்

Comments
Post a Comment