விதைத்தது யார்
விதைத்தது யார்
################
அகாலிப்புகளாய் வரும் இந்தக் காட்சிகளைக் காண மனம் பொறுக்குதில்லையே
விதைத்தது யார்
பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தையும் பருவமெய்தாத பருவப் பிள்ளைகளும்
உயிர் கொண்ட அரக்கன் ஒருவன்
பிழிந்தெடுத்து சக்கையாக்கி விட்டுருக்கிறான்
காளை அடக்கும் வீரனும் கருத்து வந்த பாலனும் நெஞ்சில் வீரம் கொண்ட தோழனும் துப்பாக்கி முனை ஒன்றின் கட்டுப்பாட்டில் கவர்ந்து இழுத்து
நசுக்கி நாசகரம் செய்யப்பட்டதோ
வருவேன் என்று சொல்லிவிட்டு வழி நடந்த கணவன் வரவில்லை
விளையாடச் சென்று விட்டில் போல் பறந்த விளையாட்டுப் பிள்ளையும் வரவில்லை
பள்ளி சென்று பக்குவமாய் படித்த பருவப்பிள்ளையும் வரவில்லை
பசியோடு காத்திருக்கும் பிள்ளைகளுக்கு உணவுக்காக உழைக்கச் சென்ற உத்தமரும் வரவில்லை பசிபோக்க யாருமில்லை
பசிக்கான விருந்தாகியவை எல்லாம் துப்பாக்கி ரவைகள் ஆகின
பசி மயக்க தூக்கம் என்று
என்ன தோன்றினாலும் அவர்களது தூக்கம் நிரந்தரமாகியது பூமியின் மேல் அல்ல அதன் ஆழத்தில் அவர்களது தூக்கத்தை அன்று கயவர் கூட்டம் கண்மூடி கழித்து விட்டது
பறித்துக்கொண்ட தூக்கத்துக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்
___________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment