முத்துக்குமார் என்ற கவிஞன்
முத்துக்குமார் என்ற கவிஞன்
########################
அணிலாடும் மூன்றிலில் தொடங்கியவன் அத்தனையும் இதுவென வித்தகமாய் சொல்லியவன்
அன்னை தந்தை
மகன் மகள் பேத்தி
மட்டுமல்ல இயற்கை செயற்கை அத்தனையும் கவியால் கோர்த்து
மாலை வடித்து எதிர்கால சந்ததி சூடக் கொடுத்தவன்
நித்தில மனித மாணிக்கமாய் என்றும்
அத்தனை கவி உள்ளங்களின்
கரம் கோர்த்து
வார்த்தை மழை பொழிந்து
எழுத்து கோலின்
தேயிலே சங்கமம் படித்து
அதற்கு நித்த நித்தம் அர்த்தத்தை கொடுத்து
பேசு பொருளாகியவன்
சிந்தையில் குடிகொண்ட
அணையாத ஒளிவீச்சாய் வரிகளை சிந்தனையை வார்த்தையை
இலக்கிய உந்துகையை
கவிதையால் வடித்து
காலம் பாடியதாய் சொல்லிவிட்டு சென்றவன்
முத்துக்குமார் என்ற பெயர்
முழுமையும் செய்யும்
கவிதை காதலனாய்
கவிஞன் என்ற பேரவனாய்
விட்டுச் சென்ற தடையங்கள்
இன்னமும்
சுவாசிக்கப்பட்டு கொண்டே
இருக்கின்றன
காலத்தின் வேர்
இன்னும் பற்றுதலில் இருந்து நீங்கவில்லை
தொடர்ந்தும் பற்றுதலுடனேயே பயணிக்கின்றது
அதுவரை அவன்
பெயர் நிலைக்கும்
அதுதான் முத்துக்குமார்
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment