தாந்தாமலை முருகனுக்கு ஒரு பாடல்
தாந்தாமலை முருகனுக்கு ஒரு பாடல்
###################################
மலையில் வாழும் குன்றுக் குமரன் மக்கள் குறைகள் தீர்க்கிறான்
தாந்தா மலையின் உச்சியிருந்து சர்வ வினைகள் களைகிறான்
சர்வ வினைகள் களைகிறான்
தாந்தா மலை ....... தாந்தா மலை..........
தாந்தாமலை ................
இது கிழக்கு மண்ணிலே
உயர்ந்த மலை
அப்பனவர்க்கு பாடம் சொன்னான் அன்று குமரனே
அறிவுரைகள் தான் கொடுத்தான் இளைய திலகமே
கானகத்தின் நடுவிருந்தான் கனிவுடனவனே
கருணை உள்ளம் தான் படைத்தான் தாந்தா அப்பனே
தாந்தா அப்பனே
மலையில் வாழும்..................
தாந்தா மலை ....... தாந்தா மலை..........
தாந்தாமலை ................
இது கிழக்கு மண்ணிலே
உயர்ந்த மலை
மூர்த்தி தலம் தீர்த்தமென்று முழுமையும் பெற்றவன் அவன்
முழுமனதாய் வேண்டுவோர்க்கு முழுமை செய்கிறான்
ஐங்கரனுக்கிளையவனாம் கந்தன் முருகனே
அவன் எழில் முகமே என்றுமெங்கள் உதய வாசமே
உதய வாசமே
மலையில் வாழும்..................
தாந்தா மலை ....... தாந்தா மலை..........
தாந்தாமலை ................
இது கிழக்கு மண்ணிலே
உயர்ந்த மலை
மட்டுவாவி மேற்கினிலே உறைவிடம் கொண்டான்
மலர் வீசி வரும் வாசம் தன்னில் தன்னையுமீந்தான்
ஏருபூட்டும் மக்கள் வாழ்வில் ஏற்றம் தந்தவன்
என்றும் ஏழைகளின் வாழ்வு தன்னை உயர்த்திநிற்பவன்....
உயர்த்திநிற்பவன்....
மலையில் வாழும்..................
தாந்தா மலை ....... தாந்தா மலை..........
தாந்தாமலை ................
இது கிழக்கு மண்ணிலே
உயர்ந்த மலை
____________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
திரு கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/கிரான்குளம்

Comments
Post a Comment