கிரான்குளம் மாரித்தாய்க்கு பாடல்
கிரான்குளம் மாரித்தாய்க்கு பாடல்
================================
ஆத்தாளே மாரியம்மா அருள் கொடுப்பாள் தேவியம்மா
கிரான்குளத்து மண்ணினிலே கிருபையுடன் வந்தவளாம்
குங்குமத்தில் தான் நிறைந்தாள் குலக்கொழுந்தே நாயகியாம்
ஆத்தாளே மாரியம்மா ...........
வருவாளம்மா...........
வருவாளம்மா ...........
வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா
ஐங்கரனுக் அருகிருந்தே அத்தனையும் காப்பவளாம்
ஔஷதமாய் வேப்பிலையை அள்ளியள்ளித் தருபவளாம்
தஞ்சமென்று வருபவரைத் தயவுடனே காப்பவளாம்
ஆலமரத்தருகிருந்து அத்தனையும் பார்ப்பவளாம்
ஆத்தாளே மாரியம்மா ...........
வருவாளம்மா...........
வருவாளம்மா ...........
வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா
நெஞ்சினிலே நிறைந்திருப்பாள்
நேயமுள்ள நாயகியாம்
அண்டமெல்லாம் காத்திடுவாள் அகிலாண்ட ஈஸ்வரியாம்
நாவினிலே நடம்புரியும்
நவரசத்தின் தேவியளாம்
துன்பமொன்று வருகையிலே துணையாக நிற்பவளாம்
ஆத்தாளே மாரியம்மா ...........
வருவாளம்மா...........
வருவாளம்மா ...........
வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா
கிரான்குளத்தூர் மக்கள் மனம் நிறைந்திடவே நிற்பவளாம்
கும்பத்தழகியம்மா குங்குமமே காத்திடுவாள்
கோபாலன் தங்கையரே கொடுமைகளை போக்கிவிடுவாள்
எங்களூர் வந்தவளாம் எல்லாமும் காத்திடுவாள்
ஆத்தாளே மாரியம்மா ...........
வருவாளம்மா...........
வருவாளம்மா ...........
வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா
___________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்

Comments
Post a Comment