கிரான்குளத்தூர் காளியம்மனுக்கு பாடல்
கிரான்குளத்தூர் காளியம்மனுக்கு பாடல்
######################################
கிரான்குளத்திலே கோயில் கொண்டருள் புரிபவள் காளியம்மா
எல்லையில்லாதொரு ஆனந்தம் தருபவள் எங்களின் தேவியம்மா
எங்களின் தேவியம்மா
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்திர.................... காளியம்மா - 2
தீயின்மிதிப்பிலே திக்கனைத்துமே நிறைந்திடும் வாசலிலே
தீய வினைகளை அகற்றிடும் உந்தன் திரவியம் தான் பெரிதே
தேனின் இனிமையாய் தெரிகிறதுந்தன் அருள்மழைதானதுவே
துன்பம்தன்னையே துரத்தியென்றுமே துணையாய் வருபவளே
அம்மா துணையாய் வருபவளே
கிரான்குளத்திலே................
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்திர................... காளியம்மா - 2
பூரணை தோறும் விரதமிருப்பவர்
பூரணமாகின்றார்
பூவையவளது பூசையில் கலப்பவர்
புதுப்பொலிவாகின்றார்
போற்றியவளது சேவடியதனைக் கூப்பியே வணங்கிடுவோம்
நித்தம் காப்பவளவளாம் கருணையை நாமும் வேண்டியே போற்றிடுவோம்
அம்மா வேண்டியே போற்றி விடுவோம்
கிரான்குளத்திலே................
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்திர................... காளியம்மா - 2
ஆற்றங்கரைதனில் ஆட்சிபுரிந்திடும்
அரசியே காளியம்மா
வல்லவினையினால் வருந்திடுமடியார் குறைகளைத் தீருமம்மா
வயலின் வெளியிலே உந்தனுறவிலே ஒருமனதாகின்றோம்
எங்கள் செயலிலே ஏற்றியே உன்னை என்றுமே போற்றுகின்றோம்
அம்மா என்றுமே போர்த்துகின்றோம்
கிரான்குளத்திலே................
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி
பத்திர................... காளியம்மா - 2
___________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
திரு கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/கிரான்குளம்

Comments
Post a Comment