உறக்கம் தேடிய இரவுப் பொழுதுகள்

 உறக்கம் தேடிய இரவுப் பொழுதுகள்

##############################


நிரந்தர உறக்கம் கொள்ளும் 

எங்கள் மீதிருக்கும் கல்லறைகளிடம் கேட்டுப் பாருங்கள் 


எங்கள் பிஞ்சுகள் முதல் முதுசம்வரை காத்துக் கடனேற்றிட செய்த அற்பணங்கள் ஏராள ஏராளம்


சூடுபிடி பூனை 

அடுப்பங்கரை நாடுவது போல் 

பகல் முழுக்க பதுங்கு குழியில் பதுங்கியிருந்து 

இரவு முழுக்க நாங்கள் 

தூக்கங்களை விற்றிருந்தோம்


பறவைகள் கூட இரை தேடி வீடு திரும்பும் அதற்கான வழி கூட இல்லாமல் நாங்கள் எங்கள் ஏற்றப் பாதையில் தொடர்ந்து பயணித்த நாட்கள் அதிகம் அதிகம்


அருகிருந்த தோழனும் 

அரவணைத்த நண்பனும் 

அறிவுரைத்த தலைவனும்

அருகிருந்து கதை பேசுகிறார்கள் அவர்கள் கல்லறைகளில் 


விட்டெறிந்த வீச்சு வலை கிளிபட்டு நாஸ்தியானது

அன்னியத்தின் வீச்சு அப்படியே அள்ளிக் கொண்டு போய்விட்டது 


காலம் தன் முகத்தில் 

அள்ளிப் பூசிய கரி வடுக்கள் 

இன்னும் மாறவில்லை 

இனியும் மாறப்போவதில்லை


இருப்பினும் மண் பற்றும் 

மதிப்புரையும் உள்ள உள்ளங்கள் 

எங்கள் பெயர்களை உச்சரிக்கத் தவறாமல் நின்று செல்லத்தான் போகிறது


எங்ளுக்கு நிரந்தர உறக்கம் தந்தார்கள் இருப்பினும் இன்று ஒவ்வொரு 

இரவுப் பொழுதும் அவர்களது உறக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்

காலத்தின் சுழற்சியில் 

அகாலங்கள் மறைந்தாலும் 

அதன் வடுக்கள் என்றும் மாறப் போவதில்லை 

உறுதி தீரப் போவதுமில்லை


__________________________

கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை