சேவை
சேவை
++++++நட்ட பயிர் வளரவில்லை நாணயங்கள் விளையவில்லை
முத்து போல் சிரிப்பு மட்டும்
மூக்குநூனி வருகிறது
பேசிவிட வார்த்தை இல்லை
பேசாத நேரமில்லை
அஞ்சுகின்ற பொழுதிலெல்லாம் அவரவர் வேலை மட்டும்
சுயநலங்கள் மிஞ்சி வந்து
சூடுபிடி கதைகள் பேசும்
அஞ்சியவர் மட்டுமங்கு அயராது உழைத்துச் செல்வார்
மிஞ்சியவர் எல்லாம் கூடி
மிடுக்கான கதைகள் பேசி
வஞ்சினம் கூடி வந்து
வரவழைத்து பாடி நிற்பார்
பிள்ளைகள் வாழ்வுதன்னை
பிடித்தெடுக்கும் பிசாசுகள் போல்
நாளெல்லாம் கழித்து நிற்பார் நயமிலா சேவகராய்
முத்து போல் பல்லை காட்டி
முன் நின்று புன்முறுவல்
செய்தாக்கால் போதுமென்று
சேவை செய்ய வந்து விட்டார்
_________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment