Posts

Showing posts from January, 2020

இலங்கைத்துறை முகத்துவாரம்

இலங்கைத்துறை முகத்துவாரம் பாலமொன்று பள்ளி கொண்டு பருவ மழைக்கனத்தில் வெள்ளம் ஊடுருவலாகி கடலைச் சங்கமிக்கும் வயல்களின் செழுமையது வயதுவந்த தாத்தாக்கள் வரிசைகட்டி வேலைசெய்து தினம் தினம் உழைக்கின்றார் ஆற்றுவாவி அரவணைப்பில் அருகாமைப் பலவூர்கள் தோணிகட்டி மிதந்து வந்து துறையூர் அடைந்திடுவார் வெருகல் முதல் போகவேணும் பதின்மூன்றரை கிலோமீற்ரர் ஊரு வந்து சேரும் இருப்பினும் தேவை சிலருக்குச் சிலகணம் பலருக்குப் பலகணம் முதியோருக்கு மூன்று நான்கு மணித்தியாலம் ஏன் ஒரு நாளென்றாலும் தவறில்லை வீதியுண்டு நேர்த்தியாக செப்பனிட்டாகிக் கனகாலம் வாகனப் பஞ்சம் இங்கு குறுகுறுக்க மக்களின் போக்குவரத்து மாயலோக வித்தையாய் தினம் தினம் இ l ம்பெறும் இம்சையின் நாடகம் தொழிலுக்குப் பஞ் r மில்லை செம்மண்ணில் விதைபோட்டு பசும்புல்லில் மாடுவளர்த்து வலைவீச தோணியும் கட்டி இழுப்பார் கரைவலை கூடியொன்றாய் மழை பொய்த்தால் விவசாயம் பாழாகும் ஆனிரைகள் வீணாகும் கடலுரப்பில் கரைவல...

இலங்கையின் கல்வி முறையும் கோளமயமாக்கமும்

இலங்கையின் கல்வி முறையும் கோளமயமாக்கமும்   இலங்கையின் கல்விமுறையானது காலத்திற்குக் காலம் மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தாலும் காலத்தின் நகர்ச்சியில் உலகம் தழுவியதாக நிதர்சனப்படுவதை கட்டுப்படுத்த முடியாததக உள்ளது. உலக மயமாக்கல் விரிவுக்கு முற்பட்ட இலங்கையின் பாரம்பரியமான கல்வியில் நிலவுடமைப் பொருளாதாரப் பண்புகளும் காலணித்துவப் பண்புகளும் கலந்த செயல்வடிவத்தைக் கொண்டிருந்தது (ஜெயராசா, 2009). என்றும் கைத்தொழிற்சாலை மனிதரைப்பற்றி என்ன புலக்காட்சி கொள்ளுகின்றதோ அத்தகைய புலக்காட்சியை கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன கல்வி நிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகு முறைக்குள் கொண்டுவரப்படுகின்றன (ஜெயராசா, 2009). என்றும் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.   சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் 'எதையும் சந்தைக்கு விடுங்கள்' (டுநயஎந வை வழ வாந அயசமநவ) என்ற ஒலிப்பை கல்வி, மருத்துவம் என்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகள் மூடி மறைக்கும் அறிகைச் செயற்பாடு...

செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய காவடிச் சிந்து

செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய காவடிச் சிந்து சற்குருவாம்ம் தும்பிக்கையுடையோனே தொந்திவயிற்றப்பனாம் பிள்ளையாரே செட்டிநகர் பொற்பதமாய் உறைந்திருக்கும் கண்ணகைத் தாயை நான் முன்னிருத்தி காவடிச் சிந்துதனை கற்பகமாய் உன் பொற்பாதம் தரவென்று நான் நினைந்தேன் எந்தன் நெஞ்சினுக்கு நிறைவு செய்வாய் எங்கள் கிரான்குளத்துப் பிள்ளையாரே அருள்செய்வாயே சார்பான கிரான்குளச் சந்நிதியில் வாயலகுமிட்டு முதுகுதனில் முள்ளும் பாய்ச்சி கண்ணகையே உனைத் தேடிவாறேன் என்கால்கள் வருந்திநிற்க பொற்பதமாய் நீசெய்த கருணைதனை என்றும் நான் மறக்கவே கூடுதில்லை தற்பரமாய் என்னுள் வந்து தயவுடனே நோக்காட்டும் செயலறுத்து அருள்செய்வாயே சிங்காரத் தோப்பதனில் மரம்சூழ வீற்றிருந்து சிந்தையுடன் வருவோர்க்கு அருளுமெய்தாய் உன்பதத்தை எய்தவென்று நானும் தோழ்தனிலே காவடியும் வருந்திச் சுமந்து வாழ்வுதனை எண்ணிநானும் வாய்மொழியால் உனக்கு ஒரு சிந்து செய்தேன்  மருதமரச் சோலையிலே இலங்கும் தேவி என் கவலைகள் களைந்தெனக்கு அருள்செய்வாயே சீரான மாந்தருக்குச் சிந்தை செய்து சிற்பரத்தில் வியோகமதாய் ஆகிநின்று ...

'மாற்றத்தின் பிரதான முகவர் ஆசிரியராவார்' இக்கருத்தை முகாமைத்துவ நிருவாக நடைமுறைகளின் அடிப்படையில் நோக்கினால்

மாற்றத்தின் பிரதான முகவர் ஆசிரியராவார்' இக்கருத்தை முகாமைத்துவ நிருவாக நடைமுறைகளின் அடிப்படையில் நோக்கினால் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை விருத்தி செய்யும் முகவர்கள் ஆகையால் மாணவர்கள் மத்தியில் நேரானதும் எதிரானதுமான மனப்பாங்குகளையும் மாணவர்களின் கற்றல் தொடர்பான ஆர்வத்தையும் சுதந்திர உணர்வுகளையும் உயர் சிந்தனை ஆற்றலையும் விருத்தி செய்ய முடியம். ஆசிரியர்களின் பணி பல அம்சங்களைக் கொண்டது. ஆசிரியர்கள் மாற்று முகவர்களாகச் செயற்பட்டு மாணவர்களிடையே புரிந்துணர்வையும் தாங்கிக்கொள்கின்ற இயல்பையும் வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. அறிவு மட்டத்தை உயர்த்துவது ஆசிரியரின் கடமையன்று மாணவப் பருவத்திலிருந்தே சமூகத் திறன்களை விருத்தி செய்வதும்; அவசியமானது. தொடர்பாடல் திறன், பன்மொழி அறிவு, குழுவாகச் செயற்படும் விருப்பம், நீண்ட நேரம் எங்கும் பணியாற்ற விருப்பம், ஆற்றல் மிக்க எவரது அறிவுறுத்தல்களையும் ஏற்றுச் செயற்படுதல் போன்ற திறன்களை மாணவரிடம் ஆசிரியர் விருத்தி செய்யவேண்டிய ஒருவராகின்றார். சமகாலத்தில் மாணவர்களை எஜமானர்களாகக் கொண்டு மாணவர்களுக்கு புத்துயிர்ப்பான கற்றல் வாய்ப...

நாள் பொழுது

நாள் பொழுது காலையில் எழுந்தேன் கண்விழித்திருந்தேன் புத்தகம் பார்த்தேன் புரியவில்லை ஒன்றும் பட்ஷிகள் சத்தம் பரவசப்படுத்தின போர்வையை இழுத்து பொழுதைக் கழத்தேன் கோயில் மணியோசை ஒலித்து ஒலித்து ஓய்ந்தது காலைக் கடன்முடிக்க கனபேர் வரிசையில் மணியும் ஏழரை தாண்ட அவசரங்கள் ஆர்ப்பரித்தன உத்தியோகம் பார்ப்போர் உரமாய் இயற்றினர் புறப்பட்டுச் செல்ல வேலைகள் தொடர்ந்தன அதிகம் பேச்சுக்கள் கனதியாய் காரியாலயத்தில் பொக்கிசம் கக்கிசம் எல்லாம் பார்த்தனர் மதிய நேரம் வந்து விட்டதால் உண்டுகளித்தனர் வருத்தமில்லாமல் வாத்தி வேலையாம் போகிறார் இவரும் காதுகள் பிளந்தன பீரங்கி வாய்வைத்து வக்கணம் கெட்டவனுக்கு வாத்தி வேலையாம் போக்கணம் கெட்டவனுக்கு பொலிஸ் வேலையாம் கிண்டலடிப்பவனுக்கு  கிளாக் வேலையாம் பிடிங்கித் தின்போனுக்குப் பீயோன் வேலையாம் சாக்கடிப்பவனுக்கு சாரதி வேலையாம் அநியாயக்காரனுக்கு அதிபர் வேலையாம் நினைவெலாம் பொய்யனுக்கு நிருவாக வேலையாம் விட்டுட்டு விதைப்போனுக்கு விரிவுரை வேலைய...

லீசிங் மாப்பிள்ளை

லீசிங் மாப்பிள்ளை வாருங்கள் வாருங்கள் மாப்பிள்ளை உண்டு குறைந்த லீசிங் கூடிய லீசிங் முற்பணம் வேண்டாம் கரண்டசும் வேண்டாம் விரும்பிய மாப்பிளையை கொண்டு போகலாம் புள் இன்சுரன்ஸ்  பாட்லி இன்சுரன்ஸ் பத்து வருட  வரன்றியும் தாறம் குடிக்கமாட்டார் புகைக்கமாட்டார் சண்டை செய்யார் சாதுவானவர் பழியும் சொல்லார் பக்குவமானவர் சிரித்த முகமாய் மலர்ச்சி பெறுபவர் என்றதாய் பலரக மாப்பிள்ளை உண்டு வீட்டில் கிடக்கார் வீறுகொண்டெழுவார் கச்சிதமாய் தினம் தொழிலைப் பார்ப்பார் இன்றே முந்துவீர் மாப்பிள்ளை பெறுவீர் முன்னாய் வந்தால் முதலில் கழிவு பதமாய் வந்தால் பத்துவீத கழிவு அன்பாய் பார்ப்பார் அரவணைத்திடுவார் துன்பமில்லாமல் குடும்பம் காப்பார் நெட்டையானவர் குட்டையானவர் தட்டையானவர் தளதளப்பானவர் வெள்ளையானவர் பொதுநிறத்தானவர் இருப்பினும் கூட நிபந்தனையுண்டு லீசிங் பெறுவீர் இனிதே வாழ்வீர்ட ரவிகிருஷ்ணா கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் கிரான்குளம் - மட்டக்களப்பு

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி   குழந்தை பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையுள்ள மிகவும் நீண்டதொரு காலப்பகுதியை தமது வளரும் காலமாக கொண்ட குழுவினரே பிள்ளைகள் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பிள்ளையின் வளர்ச்சி என்பது கூறுகூறுகளாக ஏற்படுவதில்லை அது கற்றலுடன் சம்பந்தப்பட்ட முழுமையான வளர்ச்சியாகும். வளர்ச்சியும் கற்றலும் சேர்ந்த ஒரு முழுமையான விருத்தியிலே தான் ஒரு பூரணமான பிள்ளையை உருவாக்க முடியும். இத்தகைய இம்முழுமையான வளர்ச்சியினுள் பல கூறுகள் இணைந்துள்ளன அவற்றை நாம் ஐந்து கூறுகளாக நோக்கலாம் 1. உடல் வளர்ச்சி. 2. உள வளர்ச்சி. 3. மனவெழுச்சி வளர்ச்சி. 4. சமூக வளர்ச்சி. 5. ஒழுக்க வளர்ச்சி.   எனவே பிள்ளை விருத்தி என்பது விருத்திப் போக்கின் ஒவ்வொரு பருவங்களிலும் உடல், உள, மனவெழுச்சி, சமூகம்சார், ஒழுக்க வளர்ச்சிகள் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான, நிறைவான செயற்பாடாகும்.   இவற்றுள் மனவெழுச்சி என்பது உணர்ச்சி என்பதிலும் வேறுபாடானது. இது தூண்டல்களால் தூண்டப்படுகின்ற மனநிலையாகும் என ஸ்கின்னர் (1938) போன்ற நடத்தை வாதிகள் குறிப்பிடுகின்றனர...

கடல்கடந்து காவியமான இலங்கைக் க(தை)விதை

கடல்கடந்து காவியமான இலங்கைக் க(தை)விதை எதிர் பார்ப்புக்கள் அற்று பிறப்பெடுத்தே இப்புவிதனில் உனை ஈன்றோர்தான் அகமகிழ சொற்பனங்கள் முத்தி சோதியாய் உருவெடுக்க நாட்கடப்பின் வரிசையில் நாயகியானாய் பெண்ணே தாங்கினாய் தாங்கினாய் உன் குடும்பச் சுமையதனை குடிசை வீட்டின் முகம் பேசிய கதை ஏறினாய் கடல் கடந்தாய் பெற்றோரின் கனவுகள் பலிக்கவென்று வரவுகள் கண்டிலர் ஏக்கத்துடன் குடிசையில் அறிந்தனர் சேதி அறிந்தனர் அகங்கள் கொந்தழிக்க வார்த்தை வரா வாயால் கனதியான முட்டுப்பாடு நீ சேய்முகம் பார்த்து எண்ணிய கருமம் பசி போக்க காத்திருந்த எமன் ஓடிவந்து உரசியபடி சிறையில் சிரமத்துடன் செய்தான் காத்திருக்க கனவுகள் பலிக்கவில்லை முடிவுதான் உன் இறுதிச் சேதி பெற்றோர் வருந்த நிர்க்கதி நிலையின் போட்டியில் உன் க(தை)விதை இன்று காவியமாய் வரிகளில்... ரவிகிருஷ்ணா கிருஷ்ணபிள'ளை ரவீந்திரன் கிரான்குளம், மட்டக்களப்பு

பட்டம்

பட்டம் ஏறுதுபார் வானத்தில் வளைந்து செல்லும் வாலுடன் காற்றின் வேகம் கூடவே கண்சிமிட்டிப் பறக்குது தலையை தலையை ஆட்டுது தன்னை மறக்க வைக்குது கையில் பிடித்து இழுக்கையில் கச்சிதமாய் இருக்குது மெல்ல மெல்ல போகையில் மேகத்துக்குள் மறையிது வண்ண வண்ண நிறங்களில் வரிசைகட்டி நிக்குது பட்டம் பட்டம் என்றுமே பாடிச் சிறுவர் வருகிறார் ஒன்று கூடி எம்முடன் பட்டம் விட்டுப் பார்க்கவே ரவிகிருஷ்ணா கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் கிரான்குளம், மட்டக்களப்பு

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும்    அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை பொதுவாக நோக்குகின்ற போது கல்வியியலாளர்கள் என்ற வகையில் பிள்ளை வளர்ச்சி, பிள்ளையின் மனோ நிலை, பிள்ளையை கையாளுதல் முதலான விடயங்கள் பற்றி பலர் ஒருமித்த கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும் குறிப்பிடத்தக்க சில கல்வியியலாளர்களே சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பாக தமது கருத்தினைத் தெரிவித்திருக்கின்றனர். ரூசோ சிறுவர்களுக்கான தண்டனை பற்றிய தனது கருத்தில் 'பிள்ளைகளை ஒரு போதும் தண்டிக்கக் கூடாது ஆனால் தம் தவறுகளின் இயற்கையான விளைவுகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'  என்று குறிப்பிட்டிருக்கின்றார். ரூசோவின் கருத்துப்படி பிள்ளைக்கான கல்வி பிள்ளையை மையப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். என்பது அவர் கூறிய 'தவறுகளின் இயற்கையான விளைவுகளை பிள்ளைகள் கற்றுக் கொள்ளல் வேண்டும்' என்பதிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது  தவறுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம் தவறிளைப்பதிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்ய இருக்கின்ற செயற்பாடுகளை...

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம் 1. இக்காலத்தில் உள்ள ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்கள் எவை? • இவர் ஈழத்திலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று மதுரையிலே தங்கியிருந்து பாடல்களை இயற்றியுள்ளார் என அறிய முடிகின்றது. • இவர் எழுதிய 07 பாடல்கள் குறுந்தொகை (180,343,360), நற்றிணை (360), அகநானூறு (88, 231, 307) என்பவற்றிலுள்ளன. 2. ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொள்வதற்கும், மறுப்பதற்குமாக முன்வைக்கப்படும் கருத்துக்களைத் தருக. ஏற்றுக்கொள்ளக் காரணங்கள் • பட்டினப்பாலையில் ஈழம் இலங்கையைக் குறித்தல் நீண்ட கால கலாசார பண்பாட்டுத்தொடர்பு இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவுதல் • புவியியல் ரீதியாக தமிழகம் அண்மையில் உள்ளதால் புலவர் அங்கு சென்று வாழ்ந்திருக்கலாம். • நிலைபேறான ஆட்சி இன்மையால் ஈழத்தில் புலவரை ஆதரிப்பவர் இன்றி அவர் தமிழ்வளர்த்த மதுரைக்கு சென்றிருக்கலாம். மறுக்கக் காரணம்  போதிய அகச்சான்றோ, புறச்சான்றோ பாடலில் இல்லை ஈழம் என தமிழகத்தில் உள்ள ஒரு பிரதேசத்தையும் குறிக்கும் வழக்கம் (ஈழவன்கேசரி) இருந்துள்ளமை 3. இ...

கல்யாணக் கலாட்டா

கல்யாணக் கலாட்டா பாத்திரங்கள் ஐயர், மாப்பிள்ளை, பெண், மாப்பிள்ளையின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர், சபையோர், வீடியோகாரர் இருவர் மாப்பிள்ளை தோழன், பெண்ணின் தோழி (நேரம்:- ½ மணித்தியாலம் (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கூடலாம் அல்லது குறையலாம்)) (அரங்கின் திரைகள் அகல ஆரம்பிக்கும்போது பரப்பொலி ஒலிபரப்ப திருமணத்திற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன. ஐயர் அக்கினி வளர்த்து நைவேத்தியம் சொரிந்து கொண்டிருக்கின்றார்.) ஐயர்:- பொண்ண அலைச்சிட்டு வாங்கோ.. (இவ்வேளை தோழியும் பெண்ணின் பெற்றோரும் பெண்ணை அரங்கில் அங்கும் இங்குமாக மிகவும் வேகமாக அலைக்கின்றார்கள்) ஐயர்:- ஐயோ என்ன பண்றிங்க (என ஐயர் கூற அவரது கதையைப் பொருட்படுத்தாமல் அலைய வைப்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள்) ஐயர்:- ஐயோ பொண்ண அலைச்சிட்டு வரச்சொன்னா அலைச்சிட்டு வாங்களன் மெடையில பரவியாடுறிங்க பெண் - பெற்றோர் :- நீங்கதானே சொன்னிங்க பொண்ணை அலைக்கச் சொல்லி அதுதான் அலைக்கிறோம். ஐயர்:- ஆ... ஐயோ இஞ்ச வாங்க இதுல இரிக்க வைங்க.. (இப்போது பெண்ணின் தகப்பனார் பெண் இருக்கவேண்டிய இடத்தில் ஓடிச் சென்று அமர்கின்றார்) ஐயர்:- ஐயோ தாங்க முடியலையே என்...

புதிய சூழல்

புதிய சூழல் புதிய சூழலில் வாசம் செய்வதால் அதிக எத்தனங்கள் தேவைப்படுகின்றன என் சுவாசத்திற்கு  மரங்களும் செடிகொடிகளும் காற்றசைக்கும் விதம் வேறு என்று உணர்கிறேன்  நான் உச்சந் தலையில் மயிர் சிலிர்த்து மார்பறையின்  இடைவெளிகள் வரிகளைத்  தேடுகின்றன ஓர் உன்னத வரவிற்காய்;... ரவிகிருஷ்ணா கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் கிரான்குளம், மட்டக்கப்பு