இலங்கைத்துறை முகத்துவாரம்
இலங்கைத்துறை முகத்துவாரம்
பாலமொன்று பள்ளி கொண்டு
பருவ மழைக்கனத்தில்
வெள்ளம் ஊடுருவலாகி
கடலைச் சங்கமிக்கும்
வயல்களின் செழுமையது
வயதுவந்த தாத்தாக்கள்
வரிசைகட்டி வேலைசெய்து
தினம் தினம் உழைக்கின்றார்
ஆற்றுவாவி அரவணைப்பில்
அருகாமைப் பலவூர்கள்
தோணிகட்டி மிதந்து வந்து
துறையூர் அடைந்திடுவார்
வெருகல் முதல் போகவேணும்
பதின்மூன்றரை கிலோமீற்ரர்
ஊரு வந்து சேரும்
இருப்பினும் தேவை
சிலருக்குச்
சிலகணம்
பலருக்குப்
பலகணம்
முதியோருக்கு
மூன்று
நான்கு
மணித்தியாலம்
ஏன்
ஒரு
நாளென்றாலும்
தவறில்லை
வீதியுண்டு நேர்த்தியாக
செப்பனிட்டாகிக்
கனகாலம்
வாகனப்
பஞ்சம்
இங்கு
குறுகுறுக்க
மக்களின் போக்குவரத்து
மாயலோக
வித்தையாய்
தினம்
தினம்
இlம்பெறும்
இம்சையின்
நாடகம்
தொழிலுக்குப் பஞ்rமில்லை
செம்மண்ணில்
விதைபோட்டு
பசும்புல்லில்
மாடுவளர்த்து
வலைவீச
தோணியும்
கட்டி
இழுப்பார்
கரைவலை
கூடியொன்றாய்
மழை பொய்த்தால்
விவசாயம்
பாழாகும்
ஆனிரைகள்
வீணாகும்
கடலுரப்பில்
கரைவலை
மேடேறும்
ஓடங்கள்
கரைபுரழும்
மந்திர யுத்தியென்ன
நாம்
கண்டோம்
மன்னிக்க
மனமில்லை
மரியாதை
செய்வதற்கு
நாதியில்லை
இந்த
போக்கையும்
வரத்தையும்
எண்ணிப்
பாu;க்கையில
அரசியல் குதிப்போர்
வோட்டுக்கேட்டு
வாசல்
நிற்பார்
வெண்டார்
பின்
சென்றார்
வெட்கித்
தலைகுனிவார்
அரசியல்
பேச்சாகி
நீரிட்ட
உப்பதுவாய்
காணா
மறைந்து
போவார்
யாரிடம் கேட்பது
போக்குக்கும்
வரத்துக்கும்
நாளுக்கு
மூன்று
முறை
வஸ்
நகர்வு
செய்ய
ஏனெனில்
நாமிருக்கும்
நாடு
நமது.
ரவிகிருஷ்ணா
கிரான்குளம்
Comments
Post a Comment