நாள் பொழுது
நாள் பொழுது
காலையில் எழுந்தேன்
கண்விழித்திருந்தேன்
புத்தகம் பார்த்தேன்
புரியவில்லை ஒன்றும்
பட்ஷிகள் சத்தம்
பரவசப்படுத்தின
போர்வையை இழுத்து
பொழுதைக் கழத்தேன்
கோயில் மணியோசை
ஒலித்து ஒலித்து ஓய்ந்தது
காலைக் கடன்முடிக்க
கனபேர் வரிசையில்
மணியும் ஏழரை தாண்ட
அவசரங்கள் ஆர்ப்பரித்தன
உத்தியோகம் பார்ப்போர்
உரமாய் இயற்றினர்
புறப்பட்டுச் செல்ல
வேலைகள் தொடர்ந்தன
அதிகம் பேச்சுக்கள்
கனதியாய் காரியாலயத்தில்
பொக்கிசம் கக்கிசம்
எல்லாம் பார்த்தனர்
மதிய நேரம்
வந்து விட்டதால்
உண்டுகளித்தனர்
வருத்தமில்லாமல்
வாத்தி வேலையாம்
போகிறார் இவரும்
காதுகள் பிளந்தன
பீரங்கி வாய்வைத்து
வக்கணம் கெட்டவனுக்கு
வாத்தி வேலையாம்
போக்கணம் கெட்டவனுக்கு
பொலிஸ் வேலையாம்
கிண்டலடிப்பவனுக்கு
கிளாக் வேலையாம்
பிடிங்கித் தின்போனுக்குப்
பீயோன் வேலையாம்
சாக்கடிப்பவனுக்கு
சாரதி வேலையாம்
அநியாயக்காரனுக்கு
அதிபர் வேலையாம்
நினைவெலாம் பொய்யனுக்கு
நிருவாக வேலையாம்
விட்டுட்டு விதைப்போனுக்கு
விரிவுரை வேலையாம்
அர்த்தசாமக் கள்ளனுக்கு
அதிகாரி வேலையாம்
காலி செய்வோனுக்கு
காவலாளி வேலையாம்
தண்டச் சோறனுக்கு
தலைமைத்துவ வேலையாம்
கணக்கு விடுவோனுக்கு
கணக்கப்பிள்ளை வேலையாம்
ஊழியக் காரனுக்கு
உறுப்பினர் வேலையாம்
அறவே கெட்டவனுக்கு
அரசியல் வேலையாம்
ஆசாரத் துரோகிக்கு
ஆன்மீக வேலையாம்
நிறைவு பெற்றன
கதையின் நகர்வுகள்
நாலு முப்பது மணியாக
உத்தியோகர் வீடேவார்
சம்பளம் ஓடிவரும்
மாதம் முடிய வீடுதேடி
சொல்லும் இவரொரு
வேலையில்லாப் பட்டதாரி
நானுழைப்பன் நாளுக்கு
பத்தாயிரம் ரொக்கமாய்
இதென்ன வேலது
காலைபயணம் மாலைவரையாய்
கணப்பொழுதாக
வென்றிடுவேன்நான்
சம்பளம் கிம்பளம்
காரியமியற்றி
வேண்டாம் எனக்கு
அரச ஊழியம்
வெந்து திரிகிறார்
அரச ஊழியர்தான்
சுகமாய் நானும்
சுத்தித் திரியணும்
பதமாய் நானும்
பாத்துத் திரியணும்
மேலதிகாரி
மேற்பார்வை வேண்டாம்
கங்காணிமாரின்
கரைச்சல் வேண்டாம்
சுற்றத்தாரின்
சூழுரை வேண்டாம்
மற்றுள்ளோரின்
மறுகதை வேண்டாம்
சுதந்திர உழைப்பால்
சுறுசுறுப்பாவேன்
எனக்கு நானே
அதிகாரியாவேன்
செல்லி முடிக்கல
ஒருநாள் கழிந்தது
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு
Comments
Post a Comment