கல்யாணக் கலாட்டா
கல்யாணக் கலாட்டா
பாத்திரங்கள்
ஐயர், மாப்பிள்ளை, பெண், மாப்பிள்ளையின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர், சபையோர், வீடியோகாரர் இருவர் மாப்பிள்ளை தோழன், பெண்ணின் தோழி
(நேரம்:- ½ மணித்தியாலம் (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கூடலாம் அல்லது குறையலாம்))
(அரங்கின் திரைகள் அகல ஆரம்பிக்கும்போது பரப்பொலி ஒலிபரப்ப திருமணத்திற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன. ஐயர் அக்கினி வளர்த்து நைவேத்தியம் சொரிந்து கொண்டிருக்கின்றார்.)
ஐயர்:- பொண்ண அலைச்சிட்டு வாங்கோ..
(இவ்வேளை தோழியும் பெண்ணின் பெற்றோரும் பெண்ணை அரங்கில் அங்கும் இங்குமாக மிகவும் வேகமாக அலைக்கின்றார்கள்)
ஐயர்:- ஐயோ என்ன பண்றிங்க
(என ஐயர் கூற அவரது கதையைப் பொருட்படுத்தாமல் அலைய வைப்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள்)
ஐயர்:- ஐயோ பொண்ண அலைச்சிட்டு வரச்சொன்னா அலைச்சிட்டு வாங்களன் மெடையில பரவியாடுறிங்க
பெண் - பெற்றோர் :- நீங்கதானே சொன்னிங்க பொண்ணை அலைக்கச் சொல்லி அதுதான் அலைக்கிறோம்.
ஐயர்:- ஆ... ஐயோ இஞ்ச வாங்க இதுல இரிக்க வைங்க..
(இப்போது பெண்ணின் தகப்பனார் பெண் இருக்கவேண்டிய இடத்தில் ஓடிச் சென்று அமர்கின்றார்)
ஐயர்:- ஐயோ தாங்க முடியலையே என்னால பொண்... பொண்.... பொண்ண இருக்க வை...
தகப்பனார் :- சரி சரி சரி... சரிங்கையா சரிங்க
(இவ்வேளை பெண் சபையோரைப் பார்த்தபடி மேக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறாள் இதை சகிக்க முடியாத வீடியோக்காரன் பெண்ணை இழுத்துக் கொண்டு மாப்பிள்ளைக்கு அருகில் இருத்துகிறான். பெண் அதிசயத்தோடு மாப்பிள்ளையை பார்த்து ஒவ்வொருவராக இழுத்துக் கொண்டு காட்டுகிறாள்)
பெண்:- இவர்தானாம் மாப்பிள்ளை.. மாப்பிள்ளை..
சபை:- மாப்பிள்ளையோ... மாப்பிள்ளையோ... எனப் பாடியபடி கைதட்டி ஆடுகின்றார்கள்.
சபையோரில் ஒருவர்:- இவர்தான் மாப்பிள்ளையோ நல்ல சோக்காத்தான் இருக்காரு (என்று கூறியபடி மாப்பிள்ளையின் சொக்கை கிள்ளிப் பார்க்கிறார்.)
மாப்பிள்ளை:- சொக்கை கிள்ற வேலையெல்லாம் வேணாம் சொல்லிப்போட்டன் சரியோ சொல்லிப்போட்டன் சரியோ..
(மாப்பிள்ளை அழுது கொண்டு அப்பா அப்பா இவரப் பாரப்பா சொக்கப் புடிச்சி இழுக்காரு அம்மா... அம்மா...)
மாப்பிள்ளையின் பெற்றோர்:- நீங்க மட்டும்தானா இழுப்பிங்க நாங்களும் இழுப்பந்தான் (என கூறி பெண்ணின் சொக்கை இழுத்து விடுகிறார்.)
(இவ்வேளை பெண் சொக்கூ... சொக்கூ.... சொக்கூ... அப்பா சொக்கூ, அம்மா சொக்கூ எனக் கத்துகிறாள் அப்போது வேறு ஒருவர் ஓடிவந்து மாப்பிள்ளையின் தலையை பிடித்து சுத்தி விட்டு ஊ.... ஊ.... ஊ..... என சத்தமிட்டு ஆட்டுகின்றார். இன்னுமொரு பெண் பெண்ணின் கொண்டையை பிடித்து இழுத்து ஆட்டுகிறாள். அவ்வேளை வீடியோக்காரன் விரைந்து)
வீடியோகாரன்:- எல்லாரும் விலகுங்கோ எல்லாரும் விலகுங்க விலகுங்க (என்று கூறிக்கொண்டு மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்துச் சென்று மேடையில் அமரச் செய்கிறான் அப்போது ஒருவர் ஐஸ் கிறீம் பகிர்வதைக் கண்டு பெண் மணமேடையில் இருந்து எழுந்துசென்று)
பெண்:- ஐ... ஐ... ஐ.... ஐஸ்பழம் (எனக் கூறிக்கொண்டு எழுந்து ஓடுகிறாள்.)
வீடியோகாரன்:- ஆ.... ஆ...ஆ.... நான்போப்பறன் எனக்கொண்ணா...
ஐயர்:- சரி சரி மாலையை மாத்துங்க (இவ்வேளை மாலை பெண் அவசர அவசரமாக எழுந்து வீடியோகாரனின் கழுத்தில் போட எத்தனிக்கிறாள் வீடியோக்காரன் தப்பித் தப்பி ஓடுகிறான்.)
வீடியோகாரன்:- ஐயோ நான் மாப்பிள்ளை இல்லை... நான் மாப்பிள்ளை இல்லை...
பெண்:- நீங்களும் வடிவாத்தானே இருக்கி;க
(இவ்வேளை ஐயர் தலையில் கையை வைத்தபடியோசித்த வண்ணம் இருக்கின்றார்)
வீடியோகாரன்:- ஐயா முகூர்த்தம் வந்திட்டுது.
மாப்பிள்ளை:- முகூர்த்தம் வருதாம் எல்லாரும் ஓடிவாங்க ஓடி வாங்க...(என எல்லோரையும் அழைக்கின்றான்.)
(மேடையில் உள்ள ஐயர், வீடியோக்கரன் தவிர ஏனைய அனைவரும் மேடையில் உள்ள பொருட்கள் ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு வருவதோ ஏதோ தாக்கும் மிருகம் எனக்கருதி அதை அடித்து வுPழ்த்தத் தயாராகின்றனர்)
ஐயர்:- ஐயோ எங்கு வந்தேன் நான் எல்லாமே பதறாய் இருக்குதே.... ஐயையோ ஐயையோ...
(இவ்வேளை வீடியோக்காரன் ஐயரைத் தோழில்த் தட்டித் தேற்றுகிறான் அத்தோடு ஒருவாறு பேசி மாப்பிள்ளையையும் பெண்ணையும் மணமேடையில் உட்காரச் செய்கின்றான்)
ஐயர்:- சரி சரி தாலி கட்டுங்கோ மாங்கல்யம் தந்துணானே நமஜீவணகேதுணாம்....
(இவ்வேளை மாப்பிள்ளை தாலிகட்ட தயாராகும்போது பெண் தாலியைப் பறித்து மாப்பிள்ளையின் கழுத்தில் கட்டுகிறாள் ஐயரோ விறைத்தபடி நிற்க வீடியோக்காரன் செய்வதறியாது தடுமாற சபையோர் கைதட்டுகின்றனர்)
வீடியோகாரன்:- இங்க பாருங்க இங்க பாருங்க ... (எனக்கூறி அங்கும் இங்கும் அலைந்தபடி வீடியோ எடுக்கின்றான் அனைவரும் சிரித்தபடி போஸ் கொடுக்கின்றார்கள்)
- முற்றும் -
எழுத்தாக்கம் :- ரவிகிருஷ்ணா
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு
Comments
Post a Comment