புதிய சூழல்

புதிய சூழல்

புதிய சூழலில்
வாசம் செய்வதால்
அதிக
எத்தனங்கள்
தேவைப்படுகின்றன
என் சுவாசத்திற்கு 

மரங்களும்
செடிகொடிகளும்
காற்றசைக்கும்
விதம் வேறு
என்று உணர்கிறேன் 
நான்

உச்சந் தலையில்
மயிர்
சிலிர்த்து
மார்பறையின் 
இடைவெளிகள்
வரிகளைத் 
தேடுகின்றன
ஓர் உன்னத
வரவிற்காய்;...

ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்கப்பு


Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025