பட்டம்
பட்டம்
ஏறுதுபார் வானத்தில்
வளைந்து செல்லும் வாலுடன்
காற்றின் வேகம் கூடவே
கண்சிமிட்டிப் பறக்குது
தலையை தலையை ஆட்டுது
தன்னை மறக்க வைக்குது
கையில் பிடித்து இழுக்கையில்
கச்சிதமாய் இருக்குது
மெல்ல மெல்ல போகையில்
மேகத்துக்குள் மறையிது
வண்ண வண்ண நிறங்களில்
வரிசைகட்டி நிக்குது
பட்டம் பட்டம் என்றுமே
பாடிச் சிறுவர் வருகிறார்
ஒன்று கூடி எம்முடன்
பட்டம் விட்டுப் பார்க்கவே
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு
Comments
Post a Comment