இலங்கையின் கல்வி முறையும் கோளமயமாக்கமும்
இலங்கையின் கல்வி முறையும் கோளமயமாக்கமும்
இலங்கையின் கல்விமுறையானது காலத்திற்குக் காலம் மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தாலும் காலத்தின் நகர்ச்சியில் உலகம் தழுவியதாக நிதர்சனப்படுவதை கட்டுப்படுத்த முடியாததக உள்ளது. உலக மயமாக்கல் விரிவுக்கு முற்பட்ட இலங்கையின் பாரம்பரியமான கல்வியில் நிலவுடமைப் பொருளாதாரப் பண்புகளும் காலணித்துவப் பண்புகளும் கலந்த செயல்வடிவத்தைக் கொண்டிருந்தது (ஜெயராசா, 2009). என்றும் கைத்தொழிற்சாலை மனிதரைப்பற்றி என்ன புலக்காட்சி கொள்ளுகின்றதோ அத்தகைய புலக்காட்சியை கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன கல்வி நிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகு முறைக்குள் கொண்டுவரப்படுகின்றன (ஜெயராசா, 2009). என்றும் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.
சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் 'எதையும் சந்தைக்கு விடுங்கள்' (டுநயஎந வை வழ வாந அயசமநவ) என்ற ஒலிப்பை கல்வி, மருத்துவம் என்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகள் மூடி மறைக்கும் அறிகைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன (ஜெயராசா, 2009). என்ற கருத்தும் கவனிப்பிற்குரியது.
புராதனகாலத்தில் புவியின் ஒவ்வொரு பிரதேசத்திலும் தனித்தனியான கலாசாரத்தைக் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். தற்காலத்தில் போக்குவரத்து விரிவடைந்தமையாலும், தொடர்பாடல் அதிகரித்தமையாலும் பல்வேறு சூழல் காரணிகளாலும் பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் ஒன்றாகக் கலந்து பூகோள சமுதாயமாக (புடழடியட ளுழஉநைவல) வாழ்கின்றனர்.
சமகால அறிவுப்போக்கிலும் கற்பித்தல் போக்கிலும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியுள்ளன. வேறுவகையான அறிவு வேறுவகையான விசையுடனும் வேகத்துடனும் செயற்படத் தொடங்கியுள்ளன. உதாரணமாக தொழிநுட்ப அறிவின் வேகம் இலக்கிய அறிவின் வேகத்தை விஞ்சும் வகையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அறிவின் செயற்பாடுகள் சார்பு நிலைக்கு உட்பட்டவையாகக் காணப்படுகின்றது.
உலகமயமாக்கலின் ஊடுருவல் இலங்கையின் பாலர் கல்வித்திட்டங்களில் இருந்து பல்கலைக்கழகப் பட்டமேற்படிப்புவரை பலநிலைகளில் வியாபித்துப் பரந்து வருகின்றது. முன் பள்ளிகளைப் பொறுத்தவரை அருளானந்தம்(2012) இங்கிலாந்து நாட்டில் முன்பள்ளிகள் உள்ளூராட்சி சபைகளினால் நடாத்தப்படுகின்றன. அவ்வாறு இயங்கும் முன்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சிலிருந்து முழுச் செலவீனத்திற்குமான பண ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகின்றது. என்று குறிப்பட்டுள்ள கருத்து இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் உள்ளூராட்சி சபைகளின் கீழ் இயங்குவதை அவதானிக்க முடிகின்றது. இது முன்பள்ளிக் கல்வி கோளமயத் தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இடைநிலைக் கல்வியில் தொழிநுட்பப் பாடங்கள், உட்புகுத்தப்பட்டுள்ளதுடன் செயற்பாட்டுரீதியான கற்றல் வியாபகமும் பரந்து வருவதைக் காணமுடிகின்றது
பல்கலைக்கழகங்களின் கற்கைநெறிகள் பன்முகப்படுத்தப்படுவதுடன் மேலும் பல புதிய புதிய பட்டப்படிப்புக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. உதாரணமாக தகவல் தொழிநுட்பப் பட்டம், உணவு ஊட்டலும் பதனிடலும், தாதியர் பயிற்சி, வைத்திய உதவியாளர் பயிற்சி, முகாமைத்துவம், நுண்கலைசார் பட்டங்கள் (சச்சிதானந்தம், 2013) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பொதுவாக இன்றைய தேசிய கல்வி முறைகள் உலகமயமாக்கச் செயல்நிலையால் தமது தனித் தன்மைகளை இழந்து உலகலாவிய ரீதியான அம்சங்களை பெற்று வருகின்றன. குறிப்பாக தேசிய பாடசாலைகளில் காணப்பட்ட சுதேசப் பண்புகள் வலுவிளந்து கல்வியின் நோக்கங்கள், கொள்கைகள், கல்வித் துறையில் முதன்மையும் முன்னுரிமையும் பெறும் அம்சங்கள் உலகலாவிய கல்வி முறையை தழுவியதாய் ஓர்சீர்தன்மையுற்றுள்ளன. எடுத்துக்காட்டாக சந்திரசேகரன் (2002)
• இதுவரை காலமும் கல்வி முறைகளில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்த அரசாங்கங்கள், இன்று கல்வித் துறையிலிருந்து பின்வாங்கி வருகின்றன. பாடசாலைகளைத் தனியார்மயப்படுத்தும் செயற்பாடு மேலோங்கி வருகின்றது.
• அரசாங்கப் பாடசாலைகள் வர்த்தக, தொழில் நிறுவனங்கள் போன்று சந்தைக் கேள்விகளுக்கு, பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு (ஆயசமநவ னநஅயனௌ) ஏற்ப தம்மை மாற்றி வருகின்றன.
• வர்த்தக நிறுவனங்கள் போன்று பாடசாலைகளும் நுகர்வோரைக் (பெற்றோர்களைக்) கவரும் முறையில் போட்டித் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. போன்ற விடயங்களைக் குறிப்பிட்டிருப்பது நோக்கத் தக்கது.
தாய்மொழியிற் கற்ற இலங்கைச் சமூகமானது சற்று உயர்ந்து ஏனைய மொழிகளில் தேர்ச்சி பெற ஆரம்பித்துள்ளதுடன் வேற்று மொழிகளுக்கு ஊடாக கல்விப்பரப்பை வளர்த்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது இவ்வாறான சூழலும் கோளமயமாக்கத்தின் செயல்நிலையையே எடுத்துக்காட்டுவதுடன் தொழிற்கல்வி அணுகுமுறைகள் இன்று உயர்கல்வியில் பெரும் செல்வாக்கைச் செலுத்தி வருகின்றமையும்; பல புதிய புதிய துறைகள் பெருகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி இலங்கை ஓர் அறிவுசார் பொருளாதாரமாக மாறுவதற்கு உதவக்கூடிய காரணிகளாக குறிப்பிடப்பட்டவை
1. இலங்கையின் தாராளப் பொருளாதாரம்.
2. உயர் எழுத்தறிவு வீதங்கள்.
3. விரிவான முறையில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துதல்.
4. கணக்கியல் மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் பயிற்சி பெற்றோர் கிடைக்கின்ற நிலைமை.
5. சுதந்திர சந்தைப் பொருளாதாரம்.
6. வளர்ச்சி பெற்றுவரும் தனியார் துறை.
7. வெளிநாட்டு மூலதன வருகைக்கான வாய்ப்பு.
8. கடல் கடந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு. (சந்திரசேகரன், 2008)
இவைதவிர இன்று இலங்கையில் தனியார் பாடசாலைகள், சர்வதேசப் பாடசாலைகள், சர்வதேச பல்கலைக்கழங்களின் கிளைகள், ஆங்கிலமொழிப்பாடங்கள், இணையத்தளக் கற்கைமுறைகள் என உலகமயமாக்கல் சிந்தனைகள் கல்வித்துறையில் செல்வாக்குப் பெற்றிருப்பதையும் காணலாம்.
கல்வியில் சிறந்ததும் நேர்த்தியுமான வகையில் உலகத் தழுவல் இருக்கும் போது இலங்கையில் தனியார் துறைசார் நிறுவனங்கள் இளைஞர்களிடம் எதிரிபார்க்கும்
• ஆங்கில மொழித் தேர்ச்சி, தகவல் தொழிநுட்பத் தேர்ச்சி
• சிறந்த தொடர்பாடல் திறன், தலைமை தாங்கும் திறன்
• குழுக்களுக்கூடாக சமூகப் பணியாற்றும் திறன், பிரச்சனை தீர்க்கும் திறன்
• புத்தாக்க சிந்தனை, இடர்களை எதிர்நோக்கும் ஆற்றல்
• புதிய கருத்துக்களை ஏற்கும் மனப்பாங்கு
போன்ற ஆற்றல்களை இலகுவாக அடைநடதிருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்பதிலும் ஐயமில்லை
இவ்வாறு கல்வியானது உலகமயமாக்கத்திற்கு உட்படும் வேளையில் எதிர்மறையான விளைவுகளும் உருவாவதற்கான வாய்ப்புக்களும் உண்டு அவற்றுள்
• வளர்முக நாடான இலங்கையில் இருந்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற மூளைசாலிகளின் வெளியேற்றம்.
• நவீனமயமாக்கச் செயற்பாட்டினால் சமூக உறவுகளில் ஏற்படும் பாதிப்பு.
• பயனுள்ள பாரம்பரிய நிறுவனங்களின் சிதைவு.
• பொதுமக்களின் வாழ்க்கை நிலையுடன் தொடர்பற்ற நவீனமயமாக்கப்பட்ட கற்றோர் குழாமின் தோற்றம் (சந்திரசேகரன், 2007).
மேற்கூறிய வகையில் இன்று உலமயமாக்கலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால உலகச் சவால்களை வெற்றிகொள்ளக்கூடியவகையில் கல்விச் செயற்பாடுகள் பயணிக்க ஆரம்பித்திருப்தனை அவதானிக்கக்கூடியதாக இருப்பினும் கல்வியானது உலகமயமாக்கத்திற்கு உட்படும் வேளையில் எதிர்மறையான விளைவுகளும் உருவாவதற்கான வாய்ப்புக்களும் உருவாகக்கூடியவை என்பதும் கல்வி ஊக்கிகளுக்கான ஒரு சவாலுமாகும்.
உசாத்துணை நூல்கள்
1. அருயானந்தம்,ச.,2012, முன்பள்ளிக் கல்வியின் அடிப்படைத் தத்துவங்கள், லங்கா புத்தகசாலை, கு.டு.ஐ.14இடயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கோழும்பு -12
2. சச்சிதானந்தம்,மு.,2013, உலகமயமாக்கலும் இலங்கையில் உயர் கல்வியும், வித்தியா, வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு
3. சந்திரசேகரன்,சோ., 2004, கல்வி – ஒரு பன்முக நோக்கு, லங்கா புத்தகசாலை, கொழும்பு 12
4. சந்திரசேகரன்,சோ.கருணாநிதி,மா. (2008), அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும், சேமமடு புத்தகசாலை, யுஜி.50, பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு - 11
5. சந்திரசேகரன்,சோ., (2007), கல்வியின் நவீன செல்நெறிகள், குமரன் புத்தக இல்லம், 361 ½ டாம் வீதி, கொழும்பு – 12
6. சந்திரசேகரன்,சோ (2008), சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள், சேமமடு புத்தகசாலை, யுஜி, 50, பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு – 11
7. சந்திரசேகரன்,சோ (2008), கல்வியும் நவீனமயமாக்கமும், அகவிழி வழி – 4 (48)
8. சந்திரசேகரன்,சோ (2012), உலகலாவிய உயர்கல்வி முறையின் தற்கால செல்நெறிகளும் இலங்கையின் உயர்கல்வி முறைமையும், கலாசூரி இ.சிவகுருநாதன் ஞாபகார்த்தக்குழு, இல 16ஃ1, மல்வத்தை வீதி, தெஹிவளை.
9. சந்திரசேகரன்,சோ.,சின்னத்தம்பி,மா.,(2002), கல்வியும் மனிதவள விருத்தியும், எஸ்.எச்.பதிப்பகம், 28, நந்தன தோட்டம், கொழும்பு - 04
10. ஜெயராசா.சபா (2006), கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை,
11. ஜெயராசா.சபா (2006), சமகாலக் கல்வி வளர்ச்சி, அகவிழி, 3ரொரிங்டன் அவன்யூ, கொழும்பு - 07
12. ஜெயராசா.சபா (2006), கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் ஒரு விளக்க நிலை நோக்கு, அகவிழி, 3, டொறிங்டன் அவெனியூ, கொழும்பு – 07
13. ஜெயராசா,சபா. சந்திரசேகரன்,சோ. (2009), கல்வியியலும் நிகழ்பதிவுகளும், சேமமடு புத்தகசாலை, யுஜி, 50, பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு – 11
திரு.கிருஷ;ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம் – 07
மட்டக்கப்பு
Comments
Post a Comment