கடல்கடந்து காவியமான இலங்கைக் க(தை)விதை

கடல்கடந்து காவியமான இலங்கைக் க(தை)விதை

எதிர் பார்ப்புக்கள் அற்று
பிறப்பெடுத்தே இப்புவிதனில்
உனை ஈன்றோர்தான்
அகமகிழ

சொற்பனங்கள் முத்தி
சோதியாய் உருவெடுக்க
நாட்கடப்பின் வரிசையில்
நாயகியானாய்

பெண்ணே தாங்கினாய் தாங்கினாய்
உன் குடும்பச் சுமையதனை
குடிசை வீட்டின் முகம்
பேசிய கதை

ஏறினாய் கடல் கடந்தாய்
பெற்றோரின் கனவுகள் பலிக்கவென்று
வரவுகள் கண்டிலர்
ஏக்கத்துடன் குடிசையில்

அறிந்தனர் சேதி அறிந்தனர்
அகங்கள் கொந்தழிக்க
வார்த்தை வரா வாயால்
கனதியான முட்டுப்பாடு

நீ சேய்முகம் பார்த்து
எண்ணிய கருமம் பசி போக்க
காத்திருந்த எமன்
ஓடிவந்து உரசியபடி

சிறையில் சிரமத்துடன்
செய்தான் காத்திருக்க
கனவுகள் பலிக்கவில்லை
முடிவுதான் உன் இறுதிச் சேதி

பெற்றோர் வருந்த
நிர்க்கதி நிலையின் போட்டியில்
உன் க(தை)விதை இன்று
காவியமாய் வரிகளில்...

ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள'ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை