லீசிங் மாப்பிள்ளை
லீசிங் மாப்பிள்ளை
வாருங்கள் வாருங்கள்
மாப்பிள்ளை உண்டு
குறைந்த லீசிங்
கூடிய லீசிங்
முற்பணம் வேண்டாம்
கரண்டசும் வேண்டாம்
விரும்பிய மாப்பிளையை
கொண்டு போகலாம்
புள் இன்சுரன்ஸ்
பாட்லி இன்சுரன்ஸ்
பத்து வருட
வரன்றியும் தாறம்
குடிக்கமாட்டார்
புகைக்கமாட்டார்
சண்டை செய்யார்
சாதுவானவர்
பழியும் சொல்லார்
பக்குவமானவர்
சிரித்த முகமாய்
மலர்ச்சி பெறுபவர்
என்றதாய் பலரக
மாப்பிள்ளை உண்டு
வீட்டில் கிடக்கார்
வீறுகொண்டெழுவார்
கச்சிதமாய் தினம்
தொழிலைப் பார்ப்பார்
இன்றே முந்துவீர்
மாப்பிள்ளை பெறுவீர்
முன்னாய் வந்தால்
முதலில் கழிவு
பதமாய் வந்தால்
பத்துவீத கழிவு
அன்பாய் பார்ப்பார்
அரவணைத்திடுவார்
துன்பமில்லாமல்
குடும்பம் காப்பார்
நெட்டையானவர்
குட்டையானவர்
தட்டையானவர்
தளதளப்பானவர்
வெள்ளையானவர்
பொதுநிறத்தானவர்
இருப்பினும் கூட
நிபந்தனையுண்டு
லீசிங் பெறுவீர்
இனிதே வாழ்வீர்ட
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம் - மட்டக்களப்பு
Comments
Post a Comment