'மாற்றத்தின் பிரதான முகவர் ஆசிரியராவார்' இக்கருத்தை முகாமைத்துவ நிருவாக நடைமுறைகளின் அடிப்படையில் நோக்கினால்

மாற்றத்தின் பிரதான முகவர் ஆசிரியராவார்' இக்கருத்தை முகாமைத்துவ நிருவாக நடைமுறைகளின் அடிப்படையில் நோக்கினால்

ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை விருத்தி செய்யும் முகவர்கள் ஆகையால் மாணவர்கள் மத்தியில் நேரானதும் எதிரானதுமான மனப்பாங்குகளையும் மாணவர்களின் கற்றல் தொடர்பான ஆர்வத்தையும் சுதந்திர உணர்வுகளையும் உயர் சிந்தனை ஆற்றலையும் விருத்தி செய்ய முடியம். ஆசிரியர்களின் பணி பல அம்சங்களைக் கொண்டது. ஆசிரியர்கள் மாற்று முகவர்களாகச் செயற்பட்டு மாணவர்களிடையே புரிந்துணர்வையும் தாங்கிக்கொள்கின்ற இயல்பையும் வளர்க்க வேண்டிய தேவை உள்ளது.
அறிவு மட்டத்தை உயர்த்துவது ஆசிரியரின் கடமையன்று மாணவப் பருவத்திலிருந்தே சமூகத் திறன்களை விருத்தி செய்வதும்; அவசியமானது. தொடர்பாடல் திறன், பன்மொழி அறிவு, குழுவாகச் செயற்படும் விருப்பம், நீண்ட நேரம் எங்கும் பணியாற்ற விருப்பம், ஆற்றல் மிக்க எவரது அறிவுறுத்தல்களையும் ஏற்றுச் செயற்படுதல் போன்ற திறன்களை மாணவரிடம் ஆசிரியர் விருத்தி செய்யவேண்டிய ஒருவராகின்றார்.
சமகாலத்தில் மாணவர்களை எஜமானர்களாகக் கொண்டு மாணவர்களுக்கு புத்துயிர்ப்பான கற்றல் வாய்ப்புக்களை ஏற்படுத்தி செயற்படுத்தும் வகிபாகம் ஆசிரியரை மாற்ற முகவராக்கவல்ல ஒர் செயற்பாடாகின்றது. இங்கு மணவர்களது சிந்தனைக்கு இடமளித்தல் முக்கியம் பெறுகின்றது. அதாவது கூட்டுச் செயற்பாடு, சிந்திக்கச் செய்தல், கூரறிவு மேம்பாடு, கைவினையாற்றல் மேம்பாடு, ஆளுமை, சமூகப்பண்புகளில் விருத்தி, கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
மாணவனும் ஆசிரியரும் தயாறாய் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களது ஒவ்வாத குடும்ப நிலை திட்டமிட்ட செயற்பாட்டினை வறுமையாக்கிவிடலாம். மாணவர்களுக்காக வகுப்பறைச் சூழல், பாடசாலைச் சூழல், புறச்சூழல் என்பனவற்றை ஒழுங்கமைத்தல் கல்வி சார் சூழலின் அமுலாக்கத்திற்கான அடுத்த நிலமைகளாகும். வகுப்பறை பாடசாலைச் சூழல் என்பது அதிபர் ஆசிரியர்களால் தக்க முறையில் அமைத்துக் கொடுப்பதொன்றாகும். இவ் விடயத்தில் அவர்களது ஆர்வமும் பயனுள்ள ஏற்பாடுகளும் எதிர் பார்க்கப்படுகின்றன. புறச் சூழல் என்பது சமூகச் சுழல் உட்பட ஏனைய நிலைமைகளைக் குறிக்கும் இவை கல்விச் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடையூறாக அமைதல் கூடாது. பாடசாலை பற்றிய சமூகக் கணிப்பினை வளர்ப்பதற்கான அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களின் சமூகத்துடனான பயனுள்ள நல்லுறவு சம்மந்தமான விடயத்தில் சாதகமான நிலைமையினைத் தோற்றுவிக்க முடியும். குறித்த இலக்கை நோக்கி பாடசாலைச் சமூகத்தினுள் நுளைவதும் சமூகம் பாடசாலைக்குள் நுளைவதும் இதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் மாறி மாறி அமைவதும் ஒரு தொடர் நிகழ்வாக அமைதல் வேண்டும்.
மாணவர்களுடன் நட்புடன் வழிகாட்டுபவராக செயற்படவேண்டியது ஆசிரியருடைய பொறுப்பாகின்றது. போதியளவு சுதந்திரத்துடனும், போதியளவு வழிகாட்டலுடனும், போதியளவு கட்டுப்பாட்டுடனும் செயற்பாடுகளில் ஈடுபடவும், கருத்துக்களை வெளியிடவும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடவும் கலந்துரையாடவும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்து தனது முகாமையை கொண்டு நகர்த்த வேண்டிய ஒருவருமாகின்றார். 
ஆசிரியர் மாணவர்களது தேவைகளின்பால் கரிசனையுள்ளவராக இருப்பதுடன் ஒழுக்கத்தைப் பேணும் பொருட்டு அச்சுறுத்துதல், தண்டனை வழங்குதல் போன்றவற்றிற்குப் பதிலாக ஒழுக்கம் ஏற்படும் வண்ணம் கற்பித்தல். கற்றல் அனுபவங்களை ஒழுங்கமைத்து தனியாட்களிடையேயான நற் தொடர்புகள் விருத்தியடைவதற்கான வழிவகைகளை மேற்காள்ள வேண்டியவருமாகின்றார். இவ்வாறானதொரு தலைவரின் வழிகாட்டலின் கீழ் சமூக மனவெழுச்சி, வகுப்புச் சூழ்நிலை சிறப்பாகக் காணப்படுதல் போன்றன சிறந்த மாற்ற முகவராக இனங்காட்டிக் கொள்கின்றன எனலாம்.
மாற்ற முகவர்களது செயற்பாடுகளின் வெற்றியை நாம் தற்காலத்தில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. குறிப்பாக விவேகானந்தர், ஆறுமுகநாவலர், விபுலானந்தர் போன்றோரைக் குறிப்பிடலாம் இவர்களது ஆசிரியத்துவச் செயற்பாடு அவர்களுக்கு பின்வந்த மக்களால் அவர்களைப் போலவே பின்பற்றப்படுவதற்கான செயற்பாடுகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.
மாற்ற முகவர் என்பதன் மூலம் ஒரு தனி மனிதனை மாத்திரம் அல்ல ஒரு சமூகத்தினையே மாற்றுவதற்கான வாயில் என்றே கொள்ளலாம். ஒரு ஆசிரியனால் ஒரு பிள்ளையின் நடத்தையில் ஏற்படுகின்ற மாற்றம் படிப்படியாக சகபாடிகள், சகோதரர்கள், உறவினர்கள், வீடடுச் சூழலில் வாழ்பவர்கள் பின்பற்றுதலின் அடிப்படையி; பெற்றுக்கொள்வதைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

ரவிகிருஷ்ணா 
கி.ரவீந்திரன்
மட்/கிரான்குளம்

Comments

Post a Comment

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை